கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு வேலையா.. நான் வாங்கி தர்றேன்.. ரூ.3 லட்சம் வாங்கிய பிரபா.. ஆள் எஸ்கேப்

அமமுக பெண் நிர்வாகி உள்ளிட்ட 3 பேர் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசு வேலையா.. நான் வாங்கி தர்றேன்.. ரூ.3 லட்சம் வாங்கிய பிரபா.. ஆள் எஸ்கேப்-வீடியோ

    கன்னியாகுமரி: வேலை வாங்கி தர்றதா பெரும்பாலும் ஆண்கள்தான் ஏமாற்றுவார்கள்.. ஆனால் ஒரு பெண்ணே பணத்தை ஏமாற்றி மோசடி செய்துள்ளதுடன், தாக்குதலும் நடத்தியுள்ள சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் இந்த பெண் அமமுகவின் முக்கிய நிர்வாகி என்ற தகவல் கூடுதல் பரபரப்பை கிளறி விட்டுள்ளது.

    அமமுகவின் கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி செயலாளர் பிரபா. இவரது கணவர் மோகன் அருணகிரி நாதன். அதே பகுதியில் அதாவது தக்கலையை அடுத்த திக்கணம்கோடு பகுதியில் வசித்து வந்தவர் சகின்.

    Kanniyakumari AMMK Woman Executive cheating case

    31 வயதான இவர் மெக்கானிக்கல் பிரிவில் டிப்ளமோ படித்துள்ளார். அதனால் அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான் பிரபாவின் அறிமுகம் கிடைத்துள்ளது.

    என்.ஐ.ஏ.வை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் என்.ஐ.ஏ.வை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

    சென்னையில் உள்ள அரசு ஹோமியோபதி ஆஸ்பத்திரியில் வேலை வாங்கி தருவதாக பிரபாவும், அவர் கணவரும் ஒன்றரை வருஷங்களுக்கு முன்பு சொல்லி, 3 லட்சத்தை பெற்றுள்ளனர். அதேபோல சென்னை தலைமை செயலகத்திலும் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி உள்ளனர். ஆனால் ரெண்டு பேரும் வேலையும் வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதனால், பிரபா வீட்டிற்கு கடந்த 26-ம் தேதி சாயங்காலம் சென்ற சகின் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பிரபா, கணவர் மோகன் அருணகிரி நாதன், இவர்களது மகன் சிவசூர்யா ஆகிய 3 பேரும் சகினிடம் பணத்தை திரும்ப தர முடியாது என சொன்னதுடன், ஒரு இரும்பு கம்பியால் சகினை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் வலி தாங்க முடியாமல் சகின் அலற, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சகின் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் பிரபா, கணவன், மகன் 3 பேரும் எஸ்கேப்.. அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதனால் தக்கலை போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

    English summary
    Young man complaint against AMMK Woman Executives cheating issue in Kanniyakumari
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X