கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சார் இந்த பஸ்ஸுக்கு கன்டக்டர் இல்லையா?.. டிக்கெட் வாங்கனுமே!.." பதறி அடித்து பிரேக் பிடித்த டிரைவர்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே பேருந்தில் இருந்து கன்டக்டர் விழுந்தது கூட தெரியாமல் 5 கி.மீ. தூரம் டிரைவர் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. பேருந்துக்குள் சிலர் பயணிகளே இருந்தனர்.

இந்த நிலையில் பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும், அங்கு சில பயணிகள் பேருந்தில் ஏறினர். அப்பேது டிக்கெட் எடுக்க ஆயத்தமாகினர். ஆனால் பேருந்தில் கன்டக்டர் இல்லை.

எம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராதவர்களே.. நான் அவர் மடியில் வளர்ந்தவன்.. நினைவிருக்கட்டும்.. கமல்எம்ஜிஆர் முகத்தை கூட பார்த்திராதவர்களே.. நான் அவர் மடியில் வளர்ந்தவன்.. நினைவிருக்கட்டும்.. கமல்

டிக்கெட்

டிக்கெட்

இதையடுத்து ஒருவர் டிரைவரிடம் சென்று "சார் டிக்கெட் எடுக்க வேண்டும். இந்த பேருந்தில் கன்டக்டர் இல்லையா, எப்படி டிக்கெட் எடுக்கறது சார்" என கேட்டுள்ளார்கள். உடனே டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பேருந்தை டிரைவர் ஓரமாக நிறுத்தினார்.

மருத்துவமனை

மருத்துவமனை

பின்னர் அந்த வழியாக சென்ற ஒருவரின் இரு சக்கர வாகனத்தில் ஏறி டிரைவர் தேடி சென்றார். அப்போது 5 கிலோமீட்டர் தூரம் சென்றார். அதற்குள் மூப்பந்தல் என்ற இடத்தின் அருகே காயங்களுடன் விழுந்து கிடந்த கன்டக்டர் மகாலிங்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தவறி விழுந்த கன்டக்டர்

தவறி விழுந்த கன்டக்டர்

விசாரணையில் பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த கன்டக்டர் மகாலிங்கம், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இவர் கீழே விழுந்தது டிரைவருக்கு தெரியவில்லை. இதனால் அவர் பாட்டுக்கு சென்றுவிட்டார். இதை கேட்டு டிரைவர் அதிர்ச்சி அடைந்தார்.

பொதுமக்கள்

பொதுமக்கள்

உடனே பேருந்தை எடுத்துக் கொண்டு பணிமனையில் நிறுத்தினார் டிரைவர். பின்னர் மகாலிங்கத்தை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார். ஒரு கன்டக்டர் கீழே விழுந்தது கூட தெரியாமல் இவர் என்னத்த வண்டி ஓட்டுகிறாரோ என பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆபத்து

ஆபத்து

மேலும் அதில் இருந்த சில பயணிகளும் இதை கவனிக்காதது வேதனை அளிக்கிறது என்றார்கள். ஒரு வேளை யாரும் நடமாட்டம் இல்லாத இடத்தில் கன்டக்டர் விழுந்திருந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்திருந்தால் அவரது நிலை என்னவாவது என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

English summary
Bus Conductor fell down from a bus as Driver didnt know about the incident and took the bus to 5 km away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X