கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மறக்காம ஓட்டுப்போடுங்க மக்களே... சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டர்!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மா.அரவிந்த் சைக்கிளில் சென்று வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இளம் தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Kanyakumari District Collector rode a bicycle to create awareness among the voters

நாடு முழுவதும் உள்ள இளம் தலைமுறை வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பெண்களுக்கான கோலப்போட்டி நடந்தது. மாணவிகளின் நிகழ்ச்சிகளும் நடந்தன. இதன் ஒருபகுதியாக நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சைக்கிள் பேரணி நடைபெற்றது.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடங்கிய சைக்கிள் பேரணி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்றது. கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் மா.அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உள்ளிட்ட பல்வேறு துறையினர் சைக்கிளில் பேரணியாக சென்று, வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் பதாகைகளை சைக்கிளில் ஏந்தியவாறு சென்றனர்.

வாக்காளர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பதைத் தங்களது முதல் கடமையாக கொள்ள வேண்டும். வாக்குரிமையை யாரும், எதற்காகவும் விட்டு கொடுக்கக்கூடாது என கலெக்டர் அரவிந்த் வலியுறுத்தினார்.

English summary
On the eve of National Voters' Day, Kanyakumari District Collector Ma. Aravind rode a bicycle to create awareness among the voters
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X