கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிபோதையில் ரகளை... ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பண தர மறுத்த வனத்துறையினர்

Google Oneindia Tamil News

Recommended Video

    குடிபோதையில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பண தர மறுத்த வனத்துறையினர்-வீடியோ

    கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட குமரி, நெல்லை மாவட்டத்தில் பணிபுரியும் வனத்துறை ஊழியர்களை பயணிகளும், பொதுமக்களும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன. பேருந்திற்க்காக காத்து நிற்கும் பயணிகள் அங்கு உள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவது வழக்கம். அதை போல் இன்று மாலையில் பேருந்து நிலையத்தில் பினில் ஹோட்டலில் பயணிகளும் சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

    Kanyakumari Forest department officers who refuse to pay For ate

    குடிபோதையில் இங்கு சாப்பிட வந்த மூன்றுபேர் சாப்பிடும்போதே கெட்டவார்த்தைகள் பேசியும் அங்கு பணிபுரியும் மாஸ்டரை தகாத வார்த்தைகளால் திட்டியும் அங்கு சாப்பிட்ட பெண் பயணி ஒருவரை கொச்சை வார்த்தையால் பேசியுள்ளனர். இது அங்கு சாப்பிட்ட பயணிகளை முகம் சுழிக்கவைத்தது. பின்பு சாப்பிட்டு விட்டு பணம்தர மறுத்து உள்ளனர்.

    ஹோட்டல் ஊழியர் பணம் கேட்டதற்கு முதலில் நாங்கள் வள்ளியூர் காவலர்கள் என சொல்லி தகராறில் ஈடுபட்டனர். பின்பு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் குடிபோதையில் ஹோட்டல் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு நாற்காலிகளை அடித்து உடைத்ததாகவும் கூறப்படுகிறது. ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் பயணிகளும் பொதுமக்களும் பிடித்து வடசேரி போலிசாரிடம் ஒப்படைத்த பிறகும் போலீசார் அவர்களை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரிக்காமல் அவர்களை அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    Kanyakumari Forest department officers who refuse to pay For ate

    இவர்களை பொதுமக்கள் விசாரித்ததில் திசையன்விளை, ஆரல்வாய்மொழி, வள்ளியூர் ஆகிய ஊர்களை சேர்ந்த வனத்துறை ஊழியர்கள் என கூறப்படுகிறது. forest என ஸ்டிக்கர் ஒட்டிய இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் குடி போதையில் இருந்ததாகவும், சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் தாகதவார்த்தையால் திட்டி கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்ததாகவும் நேரில் பார்த்த பொது மக்களும் ஹோட்டல் ஊழியர்களும் தெரிவித்தனர்.

    கைமீறிய பொன்னமராவதி கலவரம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு கைமீறிய பொன்னமராவதி கலவரம்.. புதுக்கோட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் அதிரடி உத்தரவு

    குடிபோதையில் இருந்த நபர்களை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்ததால் பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். பொதுமக்களை பாதுகாக்கும் போலீசாரே இம்மாதிரியான சம்பவத்தில் ஈடுபடுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Forest department officers who refuse to pay For ate Near Nagarcoil
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X