கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உடல்நலம் பாதித்த கேரள இளைஞர்.. கொரோனா அச்சத்தால் மரத்தடியில் சிகிச்சை அளித்த குமரி மருத்துவமனை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: உடல்நலம் பாதித்த கேரள இளைஞரை கொரோனா பீதியால் அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் பல மணி நேரமாக திறந்த வெளியில் இருட்டில் படுக்க வைத்து சிகிச்சையளித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    உடல்நலம் பாதித்த கேரள இளைஞர்.. கொரோனா அச்சத்தால் மரத்தடியில் சிகிச்சை

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சந்தனம்தோப்பு, சினிபவன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரனின் மகன் உதயகுமார்(49). கேரளாவில் இருந்து கடற்கரை வழியாக கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதிக்கு வந்துள்ளார்.

    கொரோனா கொடுமை.. தியேட்டர்கள் திறக்கவில்லை.. 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்த புக் மை ஷோ கொரோனா கொடுமை.. தியேட்டர்கள் திறக்கவில்லை.. 270 ஊழியர்களை பணி நீக்கம் செய்த புக் மை ஷோ

    உடல்நலம் பாதிப்பு

    உடல்நலம் பாதிப்பு

    அவருக்கு வயிற்று வலி மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மயங்கி கீழே விழுந்து விட்டார். மயக்கத்தில் இருந்த வாலிபரை கண்ட அந்த பகுதியில் உள்ள சிலர் ஆட்டோவில் ஏற்றி அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    மயக்கம்

    மயக்கம்

    உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் வந்த உதயகுமாரை மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து கொரோனா பீதியால் மருத்துவமனையில் உள்ள அறையில் அனுமதித்து சிகிச்சை அளிக்காமல் அதன் முன்பக்கத்தில் உள்ள வேப்பமரத்தின் அடியில் ஒரு பெஞ்சில் படுக்கவைத்து குளுக்கோஸ் ஏற்றியுள்ளனர்.

    ஆம்புலன்ஸ்

    ஆம்புலன்ஸ்

    மேலும் அந்த இளைஞரை மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் பலமணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. பின்னர் இரவு 7.30 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. பல மணி நேர காத்திருப்புக்குப்பின் அந்த வாலிபரை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மருத்துவமனை

    மருத்துவமனை

    பின்னர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. உடல்நலம் பாதித்த கேரள இளைஞருக்கு கொரோனா இருப்பதாக நினைத்து அரசு ஆஸ்பத்திரிக்கு வெளியே இருளில் திறந்த வெளியில் சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Kanyakumari hospital gives treatment for Kerala youth under the tree because of Corona fear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X