கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

படையெடுக்கும் தேசிய தலைவர்கள்... 234 தொகுதிகளை விடவும் ஒற்றையாக கெத்து காட்டும் குமரி!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் 234 சட்டமன்ற தொகுதிகளை விடவும் ஒற்றை ஆளாக கெத்து காட்டி வருகிறது கன்னியாகுமரி மக்களவை தொகுதி.

Recommended Video

    #TNElection2021 கன்னியாகுமரி: கொளுத்தும் வெயில்…பொன்னாருக்காக வாக்கு சேகரிப்பு: வீடு, வீடாக போன அமித்ஷா!

    கன்னியாகுமரியில் பாஜக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்குதான் சீட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. c

    ஸ்டார் அந்தஸ்து பெற்ற குமரி

    ஸ்டார் அந்தஸ்து பெற்ற குமரி

    தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் இந்த தொகுதிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த 234 தொகுதிகளை விட, இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதி அரசியல் தலைவர்களால் மிகுந்த ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது.

    கெத்து காட்டும் குமரி

    கெத்து காட்டும் குமரி

    அதுதான் கன்னியாகுமரி மக்களவை தொகுதி. கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதி காலியாகி, சட்டமன்ற தேர்தலுடன் இந்த தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், 234 சட்டமன்ற தொகுதிகளை விடவும் ஒற்றை ஆளாக கெத்து காட்டி வருகிறது கன்னியாகுமரி.

    பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

    பொன்.ராதாகிருஷ்ணன் போட்டி

    கன்னியாகுமரியில் பாஜக சார்பில் அந்த தொகுதியின் முன்னாள் எம்.பி.யும், மத்திய முன்னாள் அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்குதான் சீட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

    அமித்ஷா வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

    அமித்ஷா வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு

    தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டுமே கன்னியாகுமரிக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபட்டு, மாணவியுடன் தண்டால் எடுத்தும், மாணவருக்கு கராத்தே சொல்லிக் கொடுத்தும் அசத்தினார். இன்று மத்திய உள்துறை அமைச்சரும், மூத்த தலைவருமான அமித்ஷா கன்னியாகுமரியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அதிலும் வீடு, வீடாக சென்று பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரித்து அசத்தியுள்ளார் அமித்ஷா.

    பிரியங்கா காந்தி போட்டி?

    பிரியங்கா காந்தி போட்டி?

    கன்னியாகுமரியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த நிலையில், காங்கிரசின் பிரியங்கா காந்தி, குமரியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார் கார்த்தி சிதம்பரம். இவ்வளவு ஏன்? கடந்த நாடளுமன்ற தேர்தலிலும், வயநாடு தொகுதியை தேர்வு செய்வதற்கு முன்பு ராகுல் காந்தியின் சாய்ஸ் கன்னியாகுமரியாகத்தான் இருந்தது. அதன்பின்புதான் வசந்தகுமாருக்கு குமரி ஒதுக்கப்பட்டது.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    தேசிய கட்சிகள் இந்தியாவின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரியை ஸ்டார் அந்தஸ்து கொடுப்பதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி உங்கள் மனதில் கண்டிப்பாக எழும். ஏனெனில் குமரி மக்கள் தேசிய கட்சிகளுக்கு நல்ல மதிப்பு கொடுத்து, வாக்குகளை அளிப்பதே இதற்கு காரணம். குமரி மக்களவை தொகுதி 2014 தேர்தலுக்கு பிறகு தொகுதி மறு சீரமைப்பில் உருவாக்கப்பட்டது. அதற்கு முன்பு நாகர்கோவில் மக்களவை தொகுதியாக இருந்தது.

    மீண்டும் தாமரை மலருமா?

    மீண்டும் தாமரை மலருமா?

    தற்போது குமரி தொகுதியாக இருக்கும்போதிலும், நாகர்கோவில் தொகுதியாக இருந்தபோதிலும் இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜகதான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.குறிப்பாக குமரியை காங்கிரஸ் கோட்டை என்றும் கூறலாம். திமுக, அதிமுக மாநில கட்சிகளால் இந்த தொகுதியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. 2009-ல் மட்டும் அதிசயமாக திமுக ஒரேயொரு முறை வென்றது. மற்றபடி பாஜக, காங்கிரஸ் இங்கு வெற்றியை தீர்மானித்து வருகின்றன. இதன் காரணமாகத்தான் பாஜகவின் தேசிய தலைவர்களும் சரி, காங்கிரசின் தேசிய தலைவர்களும் சரி இங்கு அடிக்கடி முகாமிட்டு வருகின்றனர். வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்கு மீண்டும் தாமரை மலருமா? அல்லது 'கை' யின் ஆதிக்கம் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    The Kanyakumari Lok Sabha constituency has garnered more than 234 assembly constituencies since the announcement of the poll date
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X