கன்னியாகுமரி எஸ்.ஐ. சுட்டுக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்- 2 தீவிரவாதிகளுக்கு தொடர்பு?
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை சுட்டுக் கொன்ற வழக்கில் திடீர் திருப்பமாக ஹவுசிக், முகமது சமி ஆகிய 2 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரியில் கேரளா எல்லையான களியக்காவளை சோதனையில் நேற்று இரவு பணியில் இருந்தார் வில்சன். அப்போது இரவு 9.30 மணியில் வில்சன் வாகன சோதனை நடத்தி வந்தார்.

இந்த வாகன சோதனையின் போது 2 நபர்கள் திடீரென வில்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் வில்சன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 2 சந்தேக நபர்கள் கேரளா சாலையில் தப்பி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
இதனடிப்படையில் கேரளா போலீசார் 4 சந்தேக நபர்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளனர். இதை வைத்து முகமது சமி, அவரது கூட்டாளி ஹவுசிக் உள்ளிட்ட 2 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாமா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.