கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவேகானந்தர் நினைவு மண்டபம் செல்ல 4 கோடி செலவில் சூப்பர் டூப்பர் படகு.. கோவாவிலிருந்து குமரி வருகை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர ரூ.4.35 கோடி செலவில் புதிய சுற்றுலா சொகுசு படகு இன்று கன்னியாகுமரி வந்தடைந்தது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தற்போது கொரோனா காலகட்டம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் சென்று வர தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

செத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கைசெத்து கிடக்கும் குடகனாறு- ராஜாவாய்க்கால் தடுப்பணையை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

தாமிரபரணி

தாமிரபரணி

ஏற்கெனவே எம்.எல்.பொதிகை, எம்.எல்.குகன், எம்.எல்.விவேகானந்தா ஆகிய மூன்று படகுகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் புதிதாக ரூ. 4.35 கோடி செலவில் கோவாவில் தயாரிக்கப்பட்ட எம்.எல் தாமிரபரணி என்ற சொகுசு படகு ஏற்கனவே குமரிக்கு வந்துள்ளது.

படகு துறை

படகு துறை

இந்த நிலையில் 150 பயணிகள் அமரும் வகையில் கோவாவில் உருவான அதிநவீன சொகுசு படகான எம்.எல்.திருவள்ளுவர் என்ற புதிய படகு கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக படகு துறைக்கு இன்று வந்தது.

12 குளிர்சாதன வசதியுடன் கூடிய இருக்கைகள்

12 குளிர்சாதன வசதியுடன் கூடிய இருக்கைகள்

138 சாதாரண இருக்கைகள், 12 குளிர்சாதனத்துடன் கூடிய இருக்கைகளும், எல்இடி டிவி, பாட்டு கேட்கும் வசதி, அலங்கார தரைவிரிப்புகள், ஆபத்து காலத்தில் உதவும் அதிநவீன கருவிகள் மற்றும் மிதவைகளையும் கொண்டுள்ளது இந்த படகின் சிறப்பு அம்சங்களாக உள்ளன.

சுற்றுலா பயணிகள்

சுற்றுலா பயணிகள்

கொரோனா காலகட்டம் முடிந்து அரசு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் பட்சத்தில் இந்த சொகுசு படகு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் என கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர் பிச்சையா தெரிவித்துள்ளார்.

English summary
A luxury boat names M.L. Thiruvallur which was designed in Goa reached Kanyakumari today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X