கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண்களின் சபரிமலை.. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக் கொடை விழா தொடங்கியது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா இன்று கொடியற்றதுடன் தொடங்கியது.

இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். மாசி கொடை விழாவினை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.

mandakadu bagavathi amman temple festival begins

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாட்டில் உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசி கொடை விழா வெகு விமர்சியாக கொண்டாடபடுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான மாசி கொடை விழா இன்று தொடங்கியது.

mandakadu bagavathi amman temple festival begins

அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்த கோவில் தந்திரிகள் பின்னர் கொடியேற்றம் செய்து வைத்தனர். இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். பத்து நாட்கள் கொடைவிழாவில், திருவிளக்கு பூஜைகள், அத்தாழ பூஜைகள், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜை, அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வருதல், உச்சி கால பூஜை, வலியபடுக்கை, பெரிய தீ வெட்டி அலங்கார பவனி, உள்ளிட்ட பலவேறு பூஜை நிகழ்சிகள் ஒன்பது நாட்களும் நடைபெறும். வரும் 12 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்சியான கொடை விழா நடைபெற உள்ளது.

mandakadu bagavathi amman temple festival begins

அன்று நள்ளிரவில் நடைபெறும் பிரசித்து பெற்ற ஒடுக்கு பூஜையுடன் மாசி கொடை விழா நிறைவு பெறும். மாசி கொடை விழாவினை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.

English summary
The famous Mandakadu Bagavathi amman temple festival has begun
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X