கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பசி, பட்டினியால் தவித்த கொடுமை.. வயது மூப்பால் இறந்த கணவர்.. விரக்தியால் தாயும் மகளும் தற்கொலை

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வறுமை காரணமாக கைகளை கட்டிக் கொண்டு குளத்தில் விழுந்து தாய், 2 மகள்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மகள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளைய நயினார் குளத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி இருப்பதாக சுசீந்திரம் போலீசாருக்கும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற போலீசார் மூன்று பேரையும் நீரில் இருந்து மீட்ட நிலையில் ஒருவர் உயிருடனும் 2 பேர் உயிரிழந்த நிலையிலும் காணப்பட்டனர். உயிருடன் இருந்த பெண் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு : கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி - இடைத்தேர்தல் எப்போது காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு : கன்னியாகுமரி லோக்சபா தொகுதி காலி - இடைத்தேர்தல் எப்போது

தாய்

தாய்

இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்டவரிடம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், உயிருடன் மீட்கப்பட்டவர் பெயர் சச்சு (40) எனவும், உயிரிழந்தவர்கள் தாயார் பங்கஜம் (70), மற்றும் சகோதரி மாலா (48) எனவும் தெரிய வந்துள்ளது.

கொரோனா

கொரோனா

இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் இவர்களது தந்தை மட்டுமே இத்தனை தினங்களாக குடும்பத்தை காப்பாற்றி வந்தார். ஆனால் கொரோனாவால் அவருக்கும் வேலையிழப்பு ஏற்பட்டது.

 வாழவே முடியாது

வாழவே முடியாது

இதையடுத்து கடந்த சில தினங்கள் குடும்பமே பட்டினியால் வாடியது. இந்த நிலையில் சச்சுவின் தந்தை இன்று காலை வயது மூப்பால் இறந்துவிட்டார். இதனால் இனி நம்மால் வாழவே முடியாது என தாயும், மகள்களும் கதறினர்.

 மூவரும் கைகளை கட்டிக் கொண்டு

மூவரும் கைகளை கட்டிக் கொண்டு

பின்னர் தந்தையின் சடலத்தை வீட்டிலேயே விட்டுவிட்டு, இவர்கள் மூவரும் கைகளை கட்டிக் கொண்டு குளத்தில் இறங்கினர். இதில் இருவர் பலியாகிவிட்டு இளைய மகள் மட்டும் தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து மேலும் சுசீந்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
Mother and Daughter commits suicide after they are hunger for so many days in Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X