• search
கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கிட்ட போவாராம்.. கட்டிப் பிடிப்பாராம்.. காசிக்கே டஃப் கொடுத்த கவுதம்.. குமரியில் இன்னொரு கலாட்டா!

|

கன்னியாகுமரி: ஆறுதல் சொல்வது போலவே கிட்ட போய், பெண்களை கட்டிப்பிடித்து கொள்வாராம் கவுதம்.. பிறகு அந்த பெண்ணை அப்படியே படுக்கை வரை இழுத்து சென்று நாசமும் செய்துவிடுவாராம்.. இப்படி புது ரூட் போட்டு காசிக்கே அல்வா தந்துள்ளார் அவரது நண்பர் தினேஷ்!

  காசிக்கே டஃப் கொடுத்த கவுதம்.. குமரியில் இன்னொரு கலாட்டா!

  26 வயசு காசி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள் எடுத்து.. லட்சக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார். இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.

  nagarcoil kasi case issue: kasis friend dinesh arrested

  காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் வசம் போயுள்ளது.. அதில் இருந்தே விசாரணை துரிதமாகி வருகிறது.. காசி வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்களை கைப்பற்றினர்.. டாக்டர் பெண் கிப்ட் தந்த 16 ஆயிரம் ரூபாய் காஸ்ட்லி வாட்ச் உட்பட சில முக்கிய ஆவணங்கள் காசியின் ரூமில் இருந்துள்ளது.. இதனால் கண்டிப்பாக காசிக்கு விஐபிக்களுடன் தொடர்பு இருந்திருக்கும் என்ற வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது போல தெரிகிறது. இதில் காசியின் மெமரி கார்டு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை ஆரம்பித்தனர்.

  ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்யும் காசியின் நண்பர் 19 வயது ஜினோவை ஏற்கனவே போலீசார் கைது செய்து அவரிடமும் விசாரணை நடத்தினர்.. அப்போதே சிங்கப்பூரில் உள்ள மற்றொரு நண்பர் கவுதம் பெயர் அடிபட்டது.. அதனால் அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் லுக்அவுட் நோட்டீசும் விடப்பட்டுள்ளது.

  தற்போது இன்னொரு நண்பர் பெயர் வெளியாகி உள்ளது.. 3 முறை விசாரித்தும் இவரை பற்றின தகவலை காசி சொல்லவே இல்லை.. ஆனால் விஷயத்தை கக்கியது ஜினோதான்.. கணேசபுரத்தை சேர்ந்த அந்த நண்பனின் பெயர் தினேஷ்.. வயசு 26 ஆகிறது.. இவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்தானாம்.

  சின்ன பிள்ளை முதல் கல்யாணமான பெண் வரை.. ஆபாச காசி.. 10 நாள் காவல்கேட்ட போலீஸ்.. 5 நாட்களுக்கு அனுமதி

  அவங்க அப்பா ஊருக்குள் 3 இடங்களில் பேக்கரி வைத்துள்ளாராம்.. ஹோல்சேல் வியாபாரி போலும்.. பல கடைகளுக்கு ஸ்வீட் தயாரித்து அனுப்புகிறார்.. காசிக்கு இவர் நெருங்கிய நண்பர்.

  இவரது வேலை என்னவென்றால், ஏமாற்றிவிட்டு, கழற்றி விடும் பெண்களின் போன்நம்பர்களை தினேஷுக்கு தருவாராம் காசி.. அந்தப் பெண்களிடம் எதையாவது காரணத்தை சொல்லி காசியிடம் இருந்து அவர்களை விலக வைப்பதுதான் இவரது மிகப்பெரிய பணி.. தினேஷும் சம்பந்தப்பட்ட, அல்லது பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் வரவழைத்து, தனியாக பேசி ஆறுதல் சொல்வார்.

  அந்த ஆறுதல் எப்படி என்றால், காசியை பற்றி அசிங்க அசிங்கமாக பேசுவது, இல்லாதது பொல்லாதது சொல்லி, வெறுப்பை வரவழைப்பது.. நெருங்கிய நண்பரே காசியை பற்றி அவதூறாக சொல்வதால், அந்த பெண்களும் மெல்ல காசியின் நட்பை துண்டித்துவிடுவார்களாம்.

  ஆனால் இதற்கு பிறகுதான் தினேஷ் தன் எக்ஸ்ட்ரா வேலையை காட்டி உள்ளார்.. ஆறுதல் சொல்வதுபோல சொல்லி, அந்த பெண்களை தன் வலையில் விழ வைத்துள்ளார்.. காசியால் ஏமாந்தது தெரிந்து பாதிக்கப்பட்டு, மனம் உடைந்த பெண்களுக்கு தினேஷின் ஸ்வீட் ஸ்டால் வார்த்தைகள் இனிப்பாக இருந்திருக்கிறது.. அததன்பிறகு படுக்கை வரை அழைத்து சென்று அந்த பெண்களை நாசம் செய்துள்ளார்.. இது காசிக்கு தினேஷ் தந்த ஸ்பெஷல் அல்வா

  அந்த பெண்களை ஆபாசமாக போட்டோ, வீடியோ எடுத்து கொண்டு, அவர் ஒரு பக்கம் மிரட்டல் விடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார்.. தினேஷை போலீசார் இப்போது கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.. காசியே இன்னும் எத்தனை பேரை நாசம் செய்தார் என்று லிஸ்ட் எடுப்பதற்கு முன்பேயே அவரது நண்பரின் லிஸ்ட் அதைவிட பெரிசாக இருக்கும் போலதெரிகிறது. திரும்பவும் நம் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்.. பொள்ளாச்சி சம்பவத்தை போல காசி & கோ விவகாரத்தை அலட்சியமாக விட்டுவிடக்கூடாது.. பாதிக்கப்பட்ட அத்தனை பெண்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்.

  வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  nagarcoil kasi case issue: kasis friend dinesh arrested
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X