கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போட்டோ காட்ட போறியா.. அதெல்லாம் செல்லாது.. ஏன் பிளாக் பண்ணே.. பேசியது யார்.. காசியா.. பரபர ஆடியோ

நாகர்கோயில் காசியின் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ''ஏன் என்னை போனில் பிளாக் பண்ணே? நான் நல்லவன் மாதிரி நடிக்க தெரியாதா? ஒரு ஆளை நான் செட் பண்ணி என்னை நல்ல பையன் என்று சொல்ல வெக்கட்டா? அதுக்குதானே என்கிட்ட அடி வாங்குனே? போட்டோ காட்ட போறியா? போட்டோ எல்லாம் கோர்ட்டில் செல்லாது'' என்று காசி பேசும் ஆடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால் இந்த போன் காலில் பேசுபவர் காசிதானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த பேச்சில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் ஒரு பெண்ணை திட்டுவதும் பதிவாகி உள்ளது.

Recommended Video

    Nagercoil Kasi Audio Leaked-இளம்பெண்ணை மிரட்டும் நாகர்கோவில் காசி

    நாகர்கோயில் காசி என்ற 26 வயது இளைஞன் பல பெண்களிடம் பழகி ஏமாற்றி உள்ளார்.. காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி சீரழித்துள்ளார்.. அந்த வீடியோக்களை படம், வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.. நிலமோசடி, கந்துவட்டி என பல புகார்கள் உள்ளன.. நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ படங்களை போலீசார் கைப்பற்றினர்.. காசியிடம் போலீஸ் விசாரணையும் 3 நாள் நடந்தது.. மாவட்ட வாரியா, மாநில வாரியாக காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களின் லிஸ்ட் தயாராகிறது.

    ஆபாச காசி.. லொகேஷன் ஷேரிங்.. நாசமான பெண்களின் வாழ்க்கை.. டெக்னாலஜியை வைத்து அராஜகம்.. அதிரும் தகவல்!ஆபாச காசி.. லொகேஷன் ஷேரிங்.. நாசமான பெண்களின் வாழ்க்கை.. டெக்னாலஜியை வைத்து அராஜகம்.. அதிரும் தகவல்!

    அரசியல் பிரமுகர்கள்

    அரசியல் பிரமுகர்கள்

    காசி விவகாரம் வெளியே வந்தபோதே, இவருக்கு பின்னால் ஒரு கும்பலே இருக்கிறது என்று சந்தேகிக்கப்பட்டது.. அரசியல் பிரமுகர்களும் உடந்தை என்று சொல்லப்பட்டது.. காசியின் நெருங்கிய நண்பர்கள் யார், யார் என போலீசார் கண்டறிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காசி பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது.

    ஆபாச வீடியோ

    ஆபாச வீடியோ

    வழக்கமாக காசி நெருங்கி பழகும்போது, சம்பந்தப்பட்ட பெண்களுடன் ஆபாசமாக வீடியோ, போட்டோக்களை எடுத்து கொள்வார்.. காசியின் சுயரூபம் தெரிந்த பிறகு அந்த பெண்கள் காசியுடன் நட்பை துண்டித்து கொள்வார்கள்.. அப்போதுதான் காசி அவர்களை மிரட்ட ஆரம்பித்து, ஆபாச வீடியோவையும் காட்டி பணம் கறக்க ஆரம்பிப்பாராம்.

    செல்போன்

    செல்போன்

    அந்த வகையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காசியை விட்டு விலகி உள்ளார்.. சோஷியல் மீடியாவில் அவரை பிளாக் செய்தும் உள்ளார்.. அப்போது அந்த பெண்ணை காசி செல்போனில் மிரட்டி உள்ளார்.. அந்த ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.. ஆத்திரமடைந்த காசி அந்த பெண்ணை அப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியதாவது:

    ஆடியோ

    ஆடியோ

    "ஏன் என்னை போனில் பிளாக் பண்ணே? நான் நல்லவன் மாதிரி நடிக்க தெரியாதா? ஒரு ஆளை நான் செட் பண்ணி என்னை நல்ல பையன் என்று சொல்ல வெக்கட்டா? அதுக்குதானே என்கிட்ட அடி வாங்குனே? போட்டோ எல்லாம் கோர்ட்டில் செல்லாது'' என்கிறார்.. இந்த 2லைன் பேசுவதற்குள் ஏகப்பட்ட கெட்ட கெட்ட வார்த்தைகளில் அந்த பெண்ணை திட்டுகிறார்.. ஆனால் இந்த போன் காலில் பேசுபவர் காசிதானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    English summary
    nagarcoil kasis blackmailing audio has released
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X