கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சின்ன பிள்ளை முதல் கல்யாணமான பெண் வரை.. ஆபாச காசி.. 10 நாள் காவல்கேட்ட போலீஸ்.. 5 நாட்களுக்கு அனுமதி

நாகர்கோவில் காசியை விசாரிக்க 5 நாள் கோர்ட் அனுமதி தந்துள்ளது

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: ஆபாச காசியை விசாரிக்க 10 நாட்கள் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 5 நாள் விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கோர்ட் அனுமதி தந்துள்ளது. இதையடுத்து, போலீசார் துரிதமான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.. பிஞ்சு முதல் கல்யாணமான பெண்கள் வரை காசி ஏமாற்றிய பெண்களுக்கு விரைவில் ஒரு நியாயம் கிடைக்கவும் போகிறது.,

26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

nagercoil kasi: five days police custody for nagarcoil kasi

இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.. 2 முறை போலீஸ் காவலில் எடுத்தும் விசாரிக்கப்பட்டார்.

முதல்முறை, 3 நாள் விசாரணையும், அடுத்த 2வது முறையாக 6 நாள் விசாரணையும் நடந்தது.. எனினும் வழக்குக்கு போதுமான தகவல்களை இவரிடம் இருந்து பெறவில்லை என்றே தெரிகிறது... அப்போதுதான் காசியின் லேப்டாப்பில் சிறுமி முதல் கல்யாணம் ஆன பெண்கள் வரை சீரழித்து, அவர்களின் வீடியோக்களும் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடியே இருந்ததை அடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன... எப்ஐஆர் நகல்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை உடனடியாக ஆரம்பித்தனர்.

சென்னை தப்ப இதுவே சென்னை தப்ப இதுவே "லாஸ்ட் சான்ஸ்".. இழுத்து பூட்டினால் மட்டும் போதாது.. வீடுவீடாக "டெஸ்ட்" தேவை

அப்போதுதான், காசியை காவலில் எடுக்க விசாரிக்க முடிவு செய்து, நாகர்கோவில் கோர்டில் மனு தாக்கல் செய்தனர்.. காசியுடன் அவரது நண்பர் 19 வயது ஜினோவும் கைதாகி இருக்கவும், அவரையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று 10 நாள் அனுமதி கேட்டிருந்தனர்.

Recommended Video

    Nagercoil Kasi ரூமில் சிக்கிய மெமரி கார்டுகள்.. திடீர் திருப்பம்

    இந்நிலையில், காசிக்கு 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் காசி தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவரும், முக்கிய புள்ளிகளும் வசமாக சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    nagercoil kasi: five days police custody for nagarcoil kasi
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X