கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏகபட்ட பெண்கள்.. காருக்குள்ளேயே கசமுசா.. காசியின் ரூமில் சிக்கிய மெமரி கார்டுகள்.. திடீர் திருப்பம்

காசியின் செல்போன்கள், ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: சொகுசு காருக்குள்ளேயே, ஏகப்பட்ட பெண்களிடம் நெருக்கமாக இருந்துள்ளாராம் காசி.. அவரது ரூமில் மெமரி கார்டுகள், 3 செல்போன்கள் உட்பட சில ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.. அந்த மெமரி கார்டுதான் இந்த வழக்கின் முக்கிய திருப்பமாக இருக்கும் என்கிறார்கள்.

Recommended Video

    Nagercoil Kasi ரூமில் சிக்கிய மெமரி கார்டுகள்.. திடீர் திருப்பம்

    26 வயசு காசி, ஏமாற்றிய பெண்கள் நூற்றுக்கணக்கானோர்.. ஆபாச வீடியோ, நிர்வாண போட்டோக்கள்தான் காசியின் மூலதனம்.. இவைகளை வைத்து பெண்களை மிரட்டியே பணம் பறித்து சொத்துக்கள், வீடுகள் வாங்கி குவித்துள்ளார்.

    இதைதவிர, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம், போக்சோ, நிலஆக்கிரமிப்பு இப்படி என 6 கேஸ்கள் இதுவரை காசி மீது பதிவாகி உள்ளது.. குண்டர் சட்டத்திலும் கைதாகி உள்ளார்.

    நைட்டியுடன்.. தெருவில் இழுத்து சென்ற பெற்றோர்.. கடத்தப்பட்ட பெண் எங்கே? ஆணவ கொலையா? தீவிர விசாரணைநைட்டியுடன்.. தெருவில் இழுத்து சென்ற பெற்றோர்.. கடத்தப்பட்ட பெண் எங்கே? ஆணவ கொலையா? தீவிர விசாரணை

    சிபிசிஐடி

    சிபிசிஐடி

    காசி தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியபடியே இருந்ததை அடுத்து, வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.. வழக்கு தொடர்பான ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன... எப்ஐஆர் நகல்களும் ஒப்படைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை பெற்றுக் கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை உடனடியாக ஆரம்பித்தனர்.

     விசாரணை

    விசாரணை

    இதுவரை 3 முறை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுள்ளார். முதல்முறை, 3 நாள் விசாரணையும், 2வது முறையாக 6 நாள் விசாரணை,யும், 3வது முறையாக 5 நாள் விசாரணையும் நடந்து முடிந்தது.. இதில் முதல் 2 விசாரணைகளிலும் போதுமான தகவல்களை இவரிடம் இருந்து பெறவில்லை என்று கூறப்பட்ட நிலையில், 3வது முறையாக சிபிசிஐடி போலீசார் விசாரித்ததில் சில தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது... காசியுடன் சேர்த்து அவரது நண்பர் 19 வயது ஜினோவையும் போலீசார் விசாரித்தனர்.

    நண்பர்கள்

    நண்பர்கள்

    இந்த 5 நாட்கள் விசாரணை முடிந்த நிலையில், காசியும் அவரது நண்பரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பிறகு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்... முன்னதாக, சிபிசிஐடி போலீஸார், காசி வீட்டிலும் அவரது நண்பர் டேசன் ஜினோ வீட்டிலும் அவர்களை நேரில் அழைத்து சென்று சோதனை நடத்தினர்... அப்போது, காசி வீட்டில் மெமரி கார்டுகள், 3 செல்போன்களை கைப்பற்றி உள்ளனர்.

     கிப்ட் வாட்ச்

    கிப்ட் வாட்ச்

    அந்த சமயத்தில் காசி மீது முதன்முதலில் புகார் தந்த சென்னை பெண் டாக்டர் ஃகிப்ட்டாக தந்த காஸ்ட்லி வாட்ச்-சையும் கைப்பற்றினர்.. இதைதவிர, சில முக்கிய ஆவணங்கள் காசியின் ரூமில் இருந்துள்ளது.. இதனால் கண்டிப்பாக காசிக்கு விஐபிக்களுடன் தொடர்பு இருந்திருக்கும் என்ற வலுவான ஆதாரம் கிடைத்துள்ளது போல தெரிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக காசியின் மெமரி கார்டு குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

    நெருக்கம்

    நெருக்கம்

    சிறுமிகள் முதல் குடும்ப பெண்கள் வரை தன் வலையில் வீழ்த்தி, காரில் வைத்து நெருக்கமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆபாச வீடியோக்களை அப்லோடு செய்வதற்கு, காசிக்கு உதவியதாக ஜினோவுடன் சேர்த்து இன்னொரு நண்பர் பெயரும் அடிபட்டது. அந்த நண்பர் சிங்கப்பூரில் இருக்கிறார், கைது நடவடிக்கை தீவிரமாகிறது என்ற தகவலும் வெளியானது.. தற்போது, மேலும் 6 பேரை பிடித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

     6 பேர்

    6 பேர்

    முக்கிய ஆவணங்கள், 3 செல்போன்கள், மெமரி கார்டுகள், 6 நண்பர்கள் என மொத்தமாக நம் போலீசாரிடம் சிக்கி உள்ளதால், கூடிய சீக்கிரம் அனைத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்கள் என நம்பப்படுகிறது. இதையடுத்து காசி வழக்கும் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

    English summary
    nagerkovil kasi: memory card and documents were seized in kasis house
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X