சிறப்பு எஸ்ஐ வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்.. துப்பு கிடைக்காமல் என்ஐஏ திணறல்!
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கடந்த ஆண்டு சிறப்பு எஸ்ஐ வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த நிலையில் அவரை சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இத்தாலி நாட்டுடையது என தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கி பயங்கரவாதிகளுக்கு எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் 2020 ஜனவரியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு உயிரிழந்தார்.
இது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தவுபீக் (28), அப்துல் ஷமீம் (28) உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெண்களின் இடுப்பு, மடிப்பு பற்றி பேசும் திண்டுக்கல் லியோனி.. பாடநூல் கழக தலைவரா?அன்புமணி சாடல்

என்ஐஏ
பின்னர் வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு முகமை - என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், தவுபிக் உள்ளிட்டோருக்கு தலைவனாக செயல்பட்ட கடலுாரைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதி காஜா மொய்தீனை டெல்லியில் கைது செய்து திஹார் சிறையில் அடைத்தனர்.

பூந்தமல்லி
பின்னர் சென்னை பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர்தான், வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வாங்கியதும், இவருக்கு மும்பையில் சிக்கிய இஜாஸ் பாட்ஷா என்பவர் உதவியதும் தெரியவந்தது.

கேரளா
இந்தத் துப்பாக்கியை, தவுபிக் மற்றும் அப்துல் ஷமீம் கைது செய்யப் பட்ட போது கேரளத்தின் திருவனந்தபுரத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர். இந்தத் துப்பாக்கி பயங்கரவாதிகளுக்கு எப்படிக் கிடைத்தது என தெரியவில்லை.

முக்கிய புள்ளிகள்
இதன் பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகள் யார் என்பது குறித்தெல்லாம், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் துப்பு துலக்க முடியவில்லை. இதை அடுத்து, காஜா மொய்தீனை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.