அரசு மருத்துவர்கள் தொடர் ஸ்டிரைக்.. கன்னியாகுமரியில் சிகிச்சை பலனின்றி நோயாளி பலி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஐந்து நாட்களாக மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா(75). இவர் குடல் புண் காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 17- ம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

கடந்த ஐந்து நாட்களாக மருத்துவர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நோயால் கடும் அவதிப்பட்ட பிரசன்னா இன்று காலை உயிரிழந்தார்.

அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தின் போது கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலங்காநல்லூருக்கு புடின் வருகிறாரா.. புற்றீசல் போல் பரவும் செய்தி.. வெளியுறவுத் துறை விளக்குமா?
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!