கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

5 ஆயிரம் எங்கே என போஸ்டர் ஒட்டிய பாஜக.. பதிலுக்கு திமுகவினர் செய்த சம்பவம்.. பரபர கன்னியாகுமரி

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி : கன்னியாகுமரி அருகே பொங்கல் பரிசு பணம் 5 ஆயிரம் ரூபாய் எங்கே என பாஜகவினர் போஸ்டர் ஒட்டிய நிலையில், ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என சொன்னது என்னாச்சு என பதிலுக்கு திமுகவினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த பொங்கல் பண்டிகையின்போது ஆட்சியில் இருந்த அதிமுக தலைமையிலான அரசு 2019 முதல் ஆண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயும் 2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது 2500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அதனை செயல்படுத்தியது.

தேர்தலின் போது மக்களின் வாக்குகளை பெறுவதற்காக பணப்பட்டுவாடாவில் அதிமுக ஈடுபட்டுள்ளதாக அப்போது திமுக குற்றம் சாட்டியது. தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று காரணமாக காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்தது.

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்த நிலையில் சில இடங்களில் அதிமுகவினர் தாங்கள் 2500 ரூபாய் வழங்கியதை குறிப்பிட்டு அப்போது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கூறிய திமுகவினர் தற்போது பொங்கல் பரிசுப் பணம் தராமல் மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டினர். மேலும் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தரம் மற்றும் இருப்பதாகவும் இதில் ஊழல் நடந்து இருக்கலாம் என அதிமுக பாஜக உள்ளிட்டவை திமுகவினரை கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

கன்னியாகுமரியில் போஸ்டர்

கன்னியாகுமரியில் போஸ்டர்


இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலான இடங்களில் இன்று ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாஜகவினர் மூலம் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டரில் தமிழக மக்களுக்கு போலி வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசு பொங்கல் பரிசு 5000 ரூபாய் எங்கே , இவண் பாஜக கன்னியாகுமரி மாவட்டம் என குறிப்பிடப்பட்டு இந்த போஸ்டர் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் ஒட்டப்பட்டிருந்தது.

திமுகவின் பதிலடி

திமுகவின் பதிலடி

இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் போஸ்டருக்கு போஸ்டர் மூலமே பதில் கொடுத்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர். நாகர்கோவில் மாநகர திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ஒன்றிய பாஜக அரசே தேர்தலின் போது ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் போடுவேன் என்று சொன்னது என்னாச்சு? என கேள்வி எழுப்பி பாஜக எங்கெங்கெல்லாம் போஸ்டர் ஒட்டி இருந்தார்களோ அங்கும் இந்த போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

Recommended Video

    Pongal Thoguppu 2022 | Pongal Gift எப்படி இருக்கு? | Oneindia Tamil
    போஸ்டர் யுத்தம்

    போஸ்டர் யுத்தம்

    மேலும் ஒன்றிய அரசே விடியல் அரசு ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக 4000 ஆயிரம் ரூபார் வழங்கினார்கள். நீங்கள் தருவதாகச் சொன்ன 15 லட்சம் எங்கே என போஸ்டர்கள் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. போஸ்டருக்கு போஸ்டர் மூலமே திமுகவினர் பதில் சொல்லி வரும் நிலையில் கன்னியாகுமரியில் திமுக பாஜகவினர் இடையே நடக்கும் போஸ்டர் யுத்தம் அம்மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    The incident where the BJP pasted posters near Kanyakumari stating where the Pongal prize money of Rs 5,000 was and the DMK posting posters in response to the BJP's claim that it would put Rs 15 lakh in each bank account has caused a stir.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X