கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரியில் குமுறும் கடல்.. வீடுகளுக்குள் மணல் குவியல்.. மக்கள் பேரவதி

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரியில் கடல் சீற்றத்தால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து.. மக்கள் அவதி..வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மற்றும் பிள்ளைதோப்பு கடற்கரை கிராமங்களில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து வீடுகளின் மதில் சுவர் உடைந்தும் வீட்டில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து அருகில் உள்ள தேவாலயம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    மேலும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து கடலரிப்பை தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    sea erosion hits people alongside kanyakumari shore

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன்,ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் அதிகமான கடல் சீற்றம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் சில சமயங்களில் கடல் சீற்றமானது இருந்து வந்தது.

    இன்று அதிகாலை முதல் கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் மற்றும் பிள்ளை தோப்பு ஆகிய கடற்கரை கிராமங்களில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டு அதி பயங்கர அலைகள் எழுந்து ஊருக்குள் கடல் நீர் புகுந்ததால் வீடுகளின் மதில் சுவர் உடைந்து வீட்டிலுள்ள வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் வாகனங்கள் ,மீன் பிடி உபகரணங்கள் சேதமடைந்துள்ளது.

    sea erosion hits people alongside kanyakumari shore

    மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அருகில் உள்ள ஆலயம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் யாரும் இதுவரைக்கும் வந்து தங்களை பார்க்கவில்லை எனவும் மேலும் தங்கள் நீண்ட காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வரும் கடல் சீற்றத்தை தடுக்கும் விதமாக தூண்டில் வளைவு மற்றும் கடல் அரிப்பு தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

    English summary
    Sea erosion has hit people alongside kanyakumari shore today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X