கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரி காந்தி அஸ்தி கட்டடத்தில் விழுந்த சூரிய ஒளி.. கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரி காந்தி அஸ்தி கட்டடத்தில் விழுந்த சூரிய ஒளி..வீடியோ

    கன்னியாகுமரி: முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ள காந்தி மண்டபத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் அபூர்வ சூரிய ஒளி விழுந்ததை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து அண்ணல் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், பிரசாந்த் மு வடநேரே அரசு அதிகாரிகள், சமுக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரையில் அண்ணல் காந்தியடிகளுக்கு நினைவு மண்டபம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்த நாள் அன்று நண்பகல் 12 மணிக்கு காந்தி மண்டபத்தின் மேல் உள்ள துவாரம் வழியாக மண்டபத்தினுள் காந்தி அஸ்தி வைக்கபட்ட இடத்தில் உள்ள அஸ்தி கட்டத்தில் சூரிய ஒளி விழுவது வழக்கம்.

    sun light falls on gandhi asthi building in Kanyakumari

    காந்தி பிறந்த நாள் அன்று மட்டுமே விழும் இந்த சூரிய ஒளியினை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு. அதே போன்று இன்று காந்தி 150 வது பிறந்தநாளினை யொட்டி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டப்பட்டது.

    ரகுபதி ராகவ ராஜாராம் பாடல்களை பாடி அண்ணல் காந்தியடிகளுக்கு ஏராளமானோர் அவரை நினைவு கூர்ந்தனர். நண்பகல் 12 மணிக்கு காந்தி மண்டபத்தின் மேல் பகுதியில் உள்ள துவாரம் வழியாக காந்தி மண்டபத்தின் உள் அமைந்துள்ள அஸ்தி கட்டத்தில் விழுந்த ஆபூர்வ சூரிய ஒளியை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

    இந்த காட்சி மறக்க முடியாத நிகழ்வு என்றும் அவர்கள் மனம் நெகிழ்ந்தனர் . முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே அரசு அதிகாரிகள் பலர் காந்தி அஸ்தி கட்டத்தில் மாலை அணிவித்து, மலர்கள் தூவப்பட்டு மரியாதை செலுத்தினர்.

    English summary
    In a rare event, Sun light falls on Gandhi Asthi building in Kanyakumari
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X