கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம்... சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகின் பெரிய சிவன் சிலை தமிழகத்தில் !-வீடியோ

    கன்னியாகுமரி: தமிழக கேரளா எல்லையில் உள்ள சிவ பார்வதி ஆலயத்தில் பத்து கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 111.2 அடி உயரம் கொண்ட சிவலிங்கம் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் என இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம் பிடித்தது.

    இன்று ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் இந்தியா புக் ஆஃப் ரெக்கார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினர்.

    கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான உதயம்குளம்கரை பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க செங்கல் மஹேஸ்வர சிவபார்வதி கோயில் உள்ளது.

    உயரமான சிவலிங்கம்

    உயரமான சிவலிங்கம்

    இந்த கோயிலில் கடந்த 2012 ஆம் ஆண்டு உலகில் மிக உயரமான சிவலிங்கத்தை அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து, மஹேஸ்வரானந்தா சரஸ்வதி சுவாமிகள் இந்தியாவின் பல்வேறு சிவன் கோயில்களுக்கு சென்று அந்த கோயிகளின் மாதுரியை கொண்டு பணிகள் நடந்து வருகிறது.

    8 நிலைகளில் சிலை

    8 நிலைகளில் சிலை

    111.2 அடி உயரத்தில் எட்டு நிலைகளில் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்களை கொண்ட இந்த சிவலிங்கத்தின் உள்ளே குகைக்குள் செல்வது போன்றும் பரசுராமர் அகத்தியர் உட்பட பல முனிவர்கள் தவம் செய்வது போன்றும் உள்ளது. கணபதி உட்பட பல கடவுள்கள் சிற்ப வடிமைப்புடன் உள்ளே தரை தளத்தில் பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடும் வகையில் சிவலிங்க சிலையும் மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவன் பார்வதி குடி கொண்டு இருப்பது போன்று அழகிய சிலையுடன் கட்டிட கலையுடன் கட்டப்பட்டு உள்ளது.

    80% பணிகள் நிறைவு

    80% பணிகள் நிறைவு

    தற்போது 80 சதவீதம் பணிகள் நிறைவேறி உள்ளது. இந்த சிவலிங்கம் சிலை உலகில் மிக உயரமான சிவலிங்கம் என்று தேர்வாகி இந்தியா புக்காப் ரெக்காட்டில் இடம்பிடித்து உள்ளது. இதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல்ஹமீது தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட பின் சான்றிதழை ஆலய நிர்வாகியிடம் ஒப்படைத்தனர்.

    மஹா சிவராத்திரியில் திறக்க திட்டம்

    மஹா சிவராத்திரியில் திறக்க திட்டம்

    இந்த நிகழ்ச்சியில் கேரள பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிலை ஆறு ஆண்டுகளாக அறுபது பேர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சிலை வரும் மஹா சிவராத்திரி அன்று திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    English summary
    The world's tallest Shiva Linga in kumari, 111.2 feet tall sivalinga statue in the temple of Shiva Parvati, at a cost of 10 crores.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X