கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா... இஸ்லாமியர்கள் குடும்பத்துடன் பங்கேற்பு

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் தமிழகம், கேரளாவை சேர்ந்த ஏராளமான இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் தென்காசியில் பிறந்த பீர்முகம்மது என்பவர் இசுலாமிய கோட்பாடுகள் மீதான பற்றால் ஆன்மீக பயணமாக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வாழ்ந்து நெசவு தொழில் ஈடுபட்டதோடு தன் ஆழ்ந்த இலக்கிய அறிவால் ஞானப்புகழ்ச்சி, ஞானப்பூட்டு, ஞானப்பால், ஞானமணிமாலை என 14 நூல்களை எழுதி சூபி கவிஞர் என புகழ்பெற்றுள்ளர்.

the annual celebration of the sufi poet

இவர் தக்கலையில் சமாதியான இடத்தில் தர்கா அமைக்கப்பட்டு தமிழக மற்றும் கேரள இஸ்லாமிய மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த தர்காவில் ஆண்டு தோறும் நினைவு பெருவிழா நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அவரால் இயற்றப்பட்ட ஞானப்புகழ்ச்சி பாடல் ஊர்மக்களால் இரவில் துவங்கி விடிய,விடிய பாடுவது சிறப்பம்சம் ஆகும்.

the annual celebration of the sufi poet

அதையொட்டி, இந்த ஆண்டு விழாவை நேற்றிரவு கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெறுகிறது. 21ம் தேதி இரவு நடைபெறும் ஞானப்புகழ்ச்சி பாடலுக்கு பின்னர் மறுநாள் நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

the annual celebration of the sufi poet

நேர்ச்சை வழங்கும் தினத்தன்று ஆண்டு தோறும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர்.

the annual celebration of the sufi poet

சுழன்றடித்த பனிப்புயல்.. சுடச் சுட பீட்ஸா.. பைலட்டின் பலே ஐடியா.. கனடாவில் கலகல!சுழன்றடித்த பனிப்புயல்.. சுடச் சுட பீட்ஸா.. பைலட்டின் பலே ஐடியா.. கனடாவில் கலகல!

English summary
The annual festival of Sufi poet ; Many people gathered
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X