கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்டிமென்ட்டை தகர்த்த கன்னியாகுமரி தொகுதி.. பாஜக தோல்வி.. ஆனால் மத்தியில் மீண்டும் ஆட்சி…!

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் பெரும் பின்னடைவு... காங். வேட்பாளர் வசந்தகுமார் முன்னிலை- வீடியோ

    சென்னை:கன்னியாகுமரியில் வெற்றி பெறும் கட்சி தான் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்ற சென்டிமென்ட் இந்த முறை தகர்ந்துள்ளது. அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணனை விட 1 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

    தேர்தலின் போது சென்டிமென்டுக்கு என்று தனி மவுசு உண்டு. சென்டிமென்ட் பார்த்தே பல கட்சிகள் அரசியல் பயணத்தில் அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்கின்றன. அதன்படி தமிழகத்தில் கடந்த காலங்களில் இருந்து வந்த சென்டிமென்ட் தற்போது தகர்த்தெறியப் பட்டிருக்கிறது.

    குறிப்பாக கன்னியாகுமரி தொகுதிக்கு என்று காலம் காலமாக ஒரு சென்டி மென்ட் இருக்கிறது. அதாவது.. அந்த தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் என்று. இம்முறை அது தகர்ந்துள்ளது. கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் மாநிலத்திலும் ஆட்சியமைக்கும். இந்த சென்டிமென்டுகள் தற்போது தகர்ந்துள்ளது.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    தொடரும் சென்டிமென்ட்

    தொடரும் சென்டிமென்ட்

    2011ம் ஆண்டு கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் வெற்றி பெறும் கட்சி மாநிலத்தில் ஆட்சியமைக்கும் என்ற சென்டிமென்ட் இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி அள்ளியது. குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் திமுக வென்றது.

    டிரென்ட் உருவானது

    டிரென்ட் உருவானது

    ஆனால், மாநிலத்தில் ஆட்சியமைத்தது அதிமுக. அப்போதும் இந்த சென்டிமென்ட உடைத்தெறியப்பட்டது. குமரி லோக்சபா தொகுதியானது, முன்னர் நாகர்கோவில் எம்பி தொகுதியாக இருந்த போதும் இதே டிரென்ட் தான் உருவானது.

    கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக!கொடுத்ததே 5 தொகுதிகள்தான்.. அதையும் கோட்டை விட்டு வாஷ் அவுட்டான தமிழக பாஜக!

    அரியணை ஏறிய காங்.

    அரியணை ஏறிய காங்.

    அதாவது 2004ல் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பெல்லார்மின் வென்றார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. பின்னர் 2009ல் திமுக வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வென்றார். மீண்டும் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரியணை ஏறியது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது.

    சென்டிமென்ட் தகர்ந்தது

    சென்டிமென்ட் தகர்ந்தது

    தற்போது கருத்துக் கணிப்புகளில் சொன்னது போல.. பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. நாடெங்கிலும் அக்கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஆனால், கன்னியாகுமரி தொகுதியிலோ... அந்த சென்டிமென்ட் முற்றிலும் தகர்ந்திருக்கிறது.

    கொட்டுன வார்த்தைக்கெல்லாம் சேர்த்து வைத்து எச். ராஜா தலையில்கொட்டிய சிவகங்கை! கொட்டுன வார்த்தைக்கெல்லாம் சேர்த்து வைத்து எச். ராஜா தலையில்கொட்டிய சிவகங்கை!

    பாஜக தோல்வி

    பாஜக தோல்வி

    கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச் வசந்தகுமார் வெற்றி .... பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வி. கன்னியா குமரிக்கு என்று இருக்கும் சென்டிமென்டை நம்பிய பாஜகவினருக்கு, இம்முறை அது பலிக்காததால் ஏக சோகத்தில் உள்ளனர்.

    English summary
    The BJP sentiment is broken in kanyakumari lok sabha constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X