கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குமரியில் ஷாக்.. காப்பாற்ற போய்.. லைட்டரை தட்டிவிட்ட காவலர்.. கருகிய கணவன் - மனைவி!

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் வீட்டை ஜப்தி செய்யவந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்பு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய கணவன் , மனைவி ஆகியோர் மண்ணெண்ணெய்யை ஊற்றிய நிலையில், அவர்களை காப்பாற்ற முயன்ற காவலர் லைட்டரை தட்டிவிட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கணவன், மனைவி இருவரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்,

கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதி நெய்யாற்றங்கரை. இங்குள்ள நெல்லிமூடு பகுதியில் வசித்தவர் ராஜன். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் நீண்டகாலமாக சொத்து தகராறு இருந்துள்ளது.

இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்திருக்கிறது.. நீதிமன்றத்தில் ராஜனுக்கு எதிராக தீர்ப்பு வந்தது. இதையடுத்து, அதிகாரிகள் மற்றும் போலீசார் ராஜன் வசித்த வீட்டை ஜப்தி செய்ய முடிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்கள்

வீடு தேட அவகாசம்

வீடு தேட அவகாசம்

அப்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜன், அதிகாரிகளிடத்தில் தான் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கேட்டு மேல் முறையீடு செய்ய உள்ளதாக கூறியுள்ளார். மேலும், மாற்று வீடு தேட அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

ஆனால் அதிகாரிகள் ராஜனின் வாதத்தை ஏற்று மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜன்,. தன் மனைவியுடன் வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் இருவரது உடலிலும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி இருக்கிறார்.

தீ பற்றிக் கொண்டது

தீ பற்றிக் கொண்டது

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் ராஜன் , லைட்டரை எடுத்து பற்ற வைத்தார். இதை பார்த்த அருகிலிருந்த போலீஸ்காரர் ஒருவர் லைட்டரை தட்டி விட முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக ராஜன் உடல் மீது தீ பற்றிக்கொண்டது. அருகிலிருந்த ராஜனின் மனைவி மீதும் தீ பற்றியது . வேதனை தாங்காமல் இருவரும் அலறினார்கள். சிறிது நேரத்திலேயே உடல் கருகி சாய்ந்தனர்.

தம்பதி பலி

தம்பதி பலி

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த நிலையில், ராஜன் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு பலியானார். ராஜனின் உடல் உறவினர்களால் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது மனைவியும் பலியானார். சொத்து தகராறில் தீக்குளித்து கணவன் - மனைவி பரிதாபமாக இறந்த சம்பவத்தால், நெல்லி மூடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Husband and wife, commit suicide in front of officers and police after house japthi in Kanyakumari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X