கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை புதுப்பொலிவுடன் திறப்பு… சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: 3 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட பழமை வாய்ந்த பத்மநாபபுரம் அரண்மனை புதுப் பொலிவுடன் திறக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு தலை நகராக விளங்கிய கல்குளம் பத்மநாபபுரத்தில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை அமைந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த பிறகு அந்த அரண்மனை, கேரளா அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

the padmanabhapuram palace has been renovated at a cost of rs 3 crore and opened today

அந்த பழமை வாய்ந்த அரண்மனை இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து செல்கின்றனர். சிறப்பம்சங்கள் அடங்கிய புகழ் பெற்ற இந்த அரண்மனையை ஐநாவால் புகழ்பெற்ற புராதான சின்னமாக அங்கீகரிக்க முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், அரண்மனையை புனரமைக்க கேரளா அரசு தீர்மானித்தது. அதற்காக 3 கோடியே முப்பது லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. 2 ஆண்டுகளாக அந்த பணிகள் நடைபெற்றன.

பணிகள் நிறைவடைந்த நிலையில் பத்மநாபபுரம் அரண்மனையை கேரளா தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் புதுப்பொலிவுடன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கேரள எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், அரண்மனை நிர்வாக அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொண்டனர்.

English summary
The Padmanabhapuram Palace has been renovated at a cost of Rs 3 crore and opened.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X