கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி!

Google Oneindia Tamil News

Recommended Video

    குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி!

    கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே வன பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வண்ணத்துப் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக பறந்து வருவது கண்களுக்கு விருந்து படைப்பதாக உள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் , கொத்தளம் பள்ளம் , கீரிப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கூட்டம், கூட்டமாக பறந்து வருகிறது.

    Thousands of butterflies flew in Kanyakumari

    இது அவ்வழியாக செல்பவர்களையும் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. சிறிது நேரம் நின்று, பார்த்து ரசிப்பது மட்டுமின்றி, தங்களது செல்போன்களில் வீடியோ மற்றும் செல்பி புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர். பச்சை வண்ணம் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், சாலையோரங்களில் இருப்பது, வண்ண, வண்ண மலர்கள் பூப்பது போன்று காட்சி தருகிறது.

    கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் வந்துள்ளதாகவும், இந்த பூச்சிகளை நாங்கள் எந்த தொந்தரவும் செய்வதில்லை என்றும் கீப்பாறை கிராம மக்கள் கூறுகின்றனர்.

    இந்த பூச்சிகள் காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அதிக அளவில் பறக்கும். இது பார்ப்பதற்கு 'மிக அழகாகவும் இருப்பதாகவும், மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாகவும் உள்ளது. இந்த பச்சை நிற வண்ணத்துப்பூச்சிகள் ஜூன், ஜுலை மாதங்களில் அதிக அளவில் காணப்படும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    English summary
    Kanyakumari: Thousands of butterflies are flown from forest areas
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X