கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

50 ஆண்டுகளில் செய்யாத சாதனைகளை 5 ஆண்டில் செய்துள்ளோம்.. அதை சொல்லி ஓட்டு கேட்போம்.. பொன். ராதா

Google Oneindia Tamil News

Recommended Video

    முதல்வர் பழனிசாமியை புகழ்ந்த பொன். ராதாகிருஷ்ணன்-வீடியோ

    கன்னியாகுமரி: நாங்கள் செய்த சாதனைகளை மக்களிடம் முன் வைத்து வாக்கு சேகரிப்போம் என மத்திய இணையமைச்சரும், பாஜக வேட்பாளருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தல் குறித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பொன். ராதாகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து, செய்தியாளரிடம் பேசிய அவர் கூறியதாவது: 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். இன்னும் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

    அவர் கொள்கை பிடிச்சி இருக்கு.. மோடியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்! அவர் கொள்கை பிடிச்சி இருக்கு.. மோடியால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார் கவுதம் கம்பீர்!

    ஸ்டாலின் சவால்

    ஸ்டாலின் சவால்

    4,000 கோடி ரூபாய் செலவில் இரட்டை ரயில் பாதை திட்டம் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் அப்படி ஒரு திட்டமே இல்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை பரப்புகிறார். தங்களுக்கு எந்த கட்சியும் சவாலான கட்சியில்லை என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் ஸ்டாலின் தான் அவருக்கு சவால் என தெரிவித்தார்.

    வர்த்தக துறைமுகம்

    வர்த்தக துறைமுகம்

    குமரி மாவட்டத்தை சேர்ந்த லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் திட்டமாகவும் மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் திட்டமாகவும் அமையும். சரக்கு பெட்டக மாற்று வர்த்தக துறைமுகம் யார் தடுத்தாலும் அமைந்தே தீரும்.

    [உங்க தொகுதி எம்பி செயல்பாடு எப்படி? முழு விவரம் இங்கே]

    கொச்சைப்படுத்த வேண்டாம்

    கொச்சைப்படுத்த வேண்டாம்

    ஓட்டுக்கு நோட்டு கொடுத்து சிவந்த கரங்கள் ப.சிதம்பரத்தின் கரங்கள். தமிழன் என்ற கவுரவம் உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை கொச்சைப்படுத்த வேண்டாம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அனுமதிக்க கூடாது.

    அரசியல் ஆதாயம்

    அரசியல் ஆதாயம்

    மதுரை சித்திரை திருவிழா நாளில் தேர்தல் நடைபெறுவது சிரமம் தான். தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் இந்த விஷயத்தில் கவனம் கொடுக்க வேண்டும். வர்த்தக துறைமுகத்தை தலைமை ஏற்ற பிறகும் கடந்த மூன்று ஆண்டுகளாக வர்த்தக துறைமுகம் அமைய கூடாது என குமரி மாவட்டத்தில் உள்ள திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். இப்போது மீனவர்களை ஏமாற்றி அவர்களிடம் தவறான தகவல்களை கூறி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர் என்று தெரிவித்தார்.

    முதலில் ஆயரிடம் ஆசி

    முதலில் ஆயரிடம் ஆசி

    இதற்கிடையே தனது பிரச்சாரத்தின் முதல் கட்டமாக பொன் இராதாகிருஷ்ணன் இன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அவர்களை சந்தித்து ஆசி பெற்றதோடு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். அவருடன் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மற்றும் அதிமுக தேமுதிக பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    English summary
    BJP candidate Pon. Radhakrishnan Said that We Made Vote collection with achievements
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X