கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூம் போட்டோம்.. நெருக்கமா இருந்தோம்.. எல்லாம் போச்சு, ஏமாத்திட்டார்.. பேஷன் டிசைனர் பெண் புகார்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: "ரூம் போட்டோம்.. நெருக்கமாக இருந்தோம்.. கடைசியில் என்னை ஏமாற்றி விட்டார்.. நகை, பணத்தையும் வாங்கி கொண்டார், நடவடிக்கை வேண்டும்" என்று ஃபேஷன் டிசைனர் பெண் ஒருவர் இளைஞர் மீது புகார் தந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பெருமாள்புரத்தில் வசித்து வந்த பெண்ணுக்கு 28 வயதாகிறது.. 2013-ல் இவருக்கு கல்யாணமாகி உள்ளது.. ஆனால் கணவனை 3 மாதங்களிலேயே பிரிந்து விட்டார்.. டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஃபேஷன் டிசைனராக இந்த பெண் வேலை பார்த்து வருகிறார்.. அப்போதுதான் கேபிள் நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

திருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்!திருச்சியிலிருந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்ட வஸ்திரங்கள்!

வெளியூர்

வெளியூர்

ஃபேஸ்புக் நண்பர் அவர்.. அவருக்கும் 28 வயதாகிறது.. பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பி, அந்த பெண்ணும் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.. அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று ஜாலியாக இருந்து வந்துள்ளனர். இந்த சமயத்தில்தான், லோகேஷ் குமார் ஆபீஸ் வளர்ச்சிக்காக, பெண்ணிடம் 30 பவுன் நகைகளை வாங்கியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

பிறகு கார் வியாபாரம் செய்யப் போவதாக சொல்லி 5 லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார்... ஆனால், பணமும், நகையும் திருப்பி தரவும் இல்லை என தெரிகிறது... கடைசியில் கல்யாணமும் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் சொன்னாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார்.

மறுப்பு

மறுப்பு

அந்த புகாரில், "லோகேஷ் குமார் நெருங்கி பழகினார்.. ஆனால் கல்யாணம் செய்ய மறுத்துவிட்டார். நான் அவர் வீட்டுக்கு சென்று நியாயம் கேட்டதற்கு, லோகேஷ் குமாரும் அவரது அம்மா கீதா குமாரி, மாமா அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் சேர்ந்து என்னை தகாத வார்த்தைகளில் பேசி தாக்கினார்கள். பணம் மற்றும் நகையை நான் திருப்பி கேட்டதற்கு, என்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவதாக லோகேஷ்குமார் மிரட்டினார்.

 தலைமறைவு

தலைமறைவு

எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் குமாரை கைது செய்தனர். ஆனால், அவரது அம்மா, மாமா, நண்பர் என 3 பேருமே தலைமறைவாக உள்ளதால் தேடி வருகிறார்கள்

English summary
youth arrested under cheating case near kanniyakumari
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X