கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல்.. 3 பெண்களுக்கு ஆயுள்.. ஒருவருக்கு இரட்டைஆயுள்

13 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளிய 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

Google Oneindia Tamil News

கரூர்: "என் பொண்ணை கலைச்செல்வி கும்பல் கடத்திக் கொண்டுபோய் வைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளனர்.. நீங்கதான் என் மகளை அந்த கும்பல்கிட்ட இருந்து மீட்டு தரணும்" என்று அன்று கண்ணீர் மல்க கேட்ட குடும்பத்தினருக்கு இன்று கரூர் நீதிமன்றம் நியாயம் வழங்கி உள்ளது. 13 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனயைும் வழங்கி கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

2017, நவம்பர் மாதம் நடைபெற்ற சம்பவம் இது: கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி. இவருக்கு 29 வயதாகிறது. இவர் வீட்டுக்கு அருகில் 13 வயது சிறுமி நட்பாக பேசுவாள். அந்த சிறுமிக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அழைத்துச் சென்று, போதை பழக்கத்தை ஏற்படுத்தினார் கலைச்செல்வி.

13 years girl sexual harresment judgement in karur court

திருப்பூரில் சிறுமியை அடைத்து வைத்து, பாலியல் தொழிலிலும் சிறுமியை ஈடுபடுத்தி உள்ளார். இதில், குமுதவல்லி 36, கல்பனா 32, சந்தியா 36, பிரதாப் 29, சிவகுமார் 36, மணி 36 ஆகியோருக்கும் கூட்டு இருந்துள்ளது. இந்நிலையில், மகளை காணோம் என்று சிறுமியின் பெற்றோர் கரூர் மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அப்போது கலைச்செல்வி கும்பல்தான் கடத்தி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தனர்.

மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...!மாமா இப்படி பேசாதே.. அப்படித்தான்டா பேசுவேன்.. கருங்கல்லால் அடித்து கொன்ற மருமகன்...!

அப்போது, மேற்கண்ட 7 பேரும் போலீசில் சிக்கினர்.. இவர்களை போக்சோவில் கைது செய்து, கரூர் மகிளா கோர்ட்டிலும் வழக்கு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி சசிகலா, சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சரண்யா என்கிற கலைச்செல்வி, குமுதவல்லி, கல்பனா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், சிவக்குமார் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கி அதிரடியாக தீர்ப்பளித்தார் .

கைதாகி இருந்த, சந்தானமேரி, பிரதாப் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மேலும், சரண்யா என்கின்ற கலைச்செல்விக்கு ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் அபராதமும் குமுதவல்லி, கல்பனா மணி ஆகியோருக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் அபராதமும், சிவகுமாருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

ஒரே வழக்கில் 3 பெண்களுக்கு ஆயுளும், ஒரு ஆணுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் பல லட்சம் ரூபாய் அபராதமும் என அதிரடியாக வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

English summary
life sentence for 5 people in 13 year old girl sexual abuse case by karur mahila court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X