கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார்.. கரூரில் நெகிழ்ச்சி

Google Oneindia Tamil News

கரூர்: ஊரடங்கு உத்தரவு ஒரு புறமிருக்கும் நிலையில் விவசாயத்தில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் களமிறங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    வெறும் 12 வயசுதான்.. விவசாயத்தை தூக்கி பிடிக்க தந்தையுடன் போராடும் கவிக்குமார் - வீடியோ

    கரூர் மாவட்டம், செங்கம் ஊராட்சி மேலாடை பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (40). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் இவரது இரண்டாவது மகன் கவிக்குமார் (12).

    இவர் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால் தனது தந்தைக்கு உதவியாக விவசாயப் பணிகளை செய்து வருகிறார். பல சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவது எப்படி விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது?

    பொழுதுபோக்கு

    பொழுதுபோக்கு

    பல பிரபலங்கள் டிக்டாக்கில் சமையல் செய்வது உடற்பயிற்சி செய்வது போன்ற பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் கவிக்குமார் பொழுதுபோக்கில் ஆர்வம் காட்டாமல் தனது தந்தைக்கு உதவியாக விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    ஆடு, மாடு

    ஆடு, மாடு

    ஏர் உழுவது, விதைப்பது, ஆடு மாடுகளைப் பராமரிப்பு அவற்றிற்கு உரிய தண்ணீர் காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஈடுபடுத்தியுள்ளது. ஒரு பக்கம் கொரோனா லாக்டவுனால் வறுமையில் இருக்கும் குடும்பத்தை தூக்கி நிறுத்த தஞ்சையில் சமோசா விற்கும் விஷ்ணு. மறுபக்கம் விவசாயத்தை தூக்கி நிறுத்த விவசாயம் செய்யும் கவிக்குமார். இருவரும் 12 வயது குழந்தைகள்தான். டாக்டர் மகன் டாக்டராவது, என்ஜீனியர் மகன் என்ஜீனியராவது என பரம்பரை பரம்பரை இருக்கும்போது விவசாயியின் மகன் மட்டும் விவசாயி ஆவதில்லை என கூறுவதை நாம் கேட்டுள்ளோம்.

    செய்முறை விளக்கங்கள்

    செய்முறை விளக்கங்கள்

    இது போன்றவற்றை சினிமா வசனங்களிலும் கேட்டுள்ளோம். ஆனால் கவிக்குமாருக்கு விவசாயத்தின் மீதுள்ள ஈடுபாட்டை நினைத்து அனைவரும் பெருமைப்பட வேண்டும். விவசாயம்தான் இந்த நாட்டின் முதுகெலும்பு என காந்தி கூறினார். பாடப்பிரிவுகளில் இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் போன்ற பாடத்திட்டங்களுக்கு செய்முறை விளக்கங்கள் செய்கிறோம்.

    மாணவர்கள்

    மாணவர்கள்

    அது போல் விவசாயம் குறித்து ஒரு பாடப்பிரிவு, பள்ளிகளில் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அதற்காக மாணவர்களுக்கு செய்முறை விளக்கங்களும் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்ணும் ஒரு உணவு எப்படி தயாராகிறது என்பதை மாணவர்கள் உணருவர். குறைந்தபட்சம் வீடுகளிலோ பள்ளிகளிலோ காய்கறி, பழம், கீரை- இவற்றில் ஏதாவது ஒன்றை விளைய வைக்க சொல்லி அந்த மாணவர்களை பரிசுகள் கொடுத்து பாராட்டலாம்.

    English summary
    A 12 years old boy committed himself in Agricultural activities with his father in Karur as schools are not functioning during lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X