கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓடும் பஸ்சில் கழன்று ஓடிய டயர்.. பாலபாரதிக்கு துப்பாக்கி மிரட்டல்.. 2020ல் கரூரை அதிர வைத்த வீடியோ

Google Oneindia Tamil News

கரூர்: 2020ம் ஆண்டு, கரூர் மாவட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகள் அதிர வைத்தன. அப்படி டாப் லிஸ்டில் வந்த வீடியோக்களின் தொகுப்பை பாருங்கள்.

Recommended Video

    ரீவைண்ட் 2020.. கரூர் டாப்-10..!

    முதல் இடத்தை, ஆம்புலன்சில் சென்று ஓட்டுப் போட்ட பாட்டிக்கு கொடுக்கலாம். நத்தமேடு பகுதியில் பொன்னம்மாள் என்ற மூதாட்டி ஆம்புலன்சில் போய் ஓட்டுப் போட்டார். அப்போது அந்த வீடியோ பரபரப்பாக பேசப்பட்டது.

    A list on major events happened in Karur district

    ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது, எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணும் மையத்திலேயே அமைந்து திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தர்ணா செய்தனர். இதையடுத்து காவல்துறை குவிக்கப்பட்டது. இரவோடு, அதிமுக வென்றதாக அறிவிப்பு வெளியானது.

    ஆம்னி பஸ்சிலிருந்து டயர் கழன்று ஓடிய சம்பவம் இந்த பட்டியலில், 3வது இடத்தை பிடித்துள்ளது. சேலம் நோக்கி சென்ற கேபிஎன் பஸ்சின் முன்பக்க இடதுபுறம் டயர் திடீரென கழன்று உருண்டு ஓடியுள்ளது. அந்த டயர், ரேஷன் கடை சுற்றுச்சுவரை உடைச்சிகிட்டு உள்ளே போனது. பிறகுதான் டிரைவருக்கே விஷயம் தெரியவந்தது. திடீரென பஸ் குடை சாய்ந்தது. ஆனால் நல்லவேளையாக டிரைவரின் சாமர்த்தியத்தால், பஸ் நிறுத்தப்பட்டு பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

    மனவாசி டோல்கேட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கார் போனபோது, டோல் கேட்டனர் ஊழியர்கள். மாஜி எம்எல்ஏ கார் என்றாலும்கூட அதற்கு இலவச அனுமதி கிடையாது என்று கூறினர். இதையடுத்து பாலபாரதி கூட வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் டோல்கேட்டில் வாக்குவாதம் செய்தனர். பேசும்போதே ஒருவர் துப்பாக்கி கொண்டு வந்து மிரட்டினார் என பாலபாரதி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    இதோ வீடியோவில் அந்த பகீர் சம்பவங்களின் தொகுப்புகளை நீங்களே பாருங்கள்.

    English summary
    Many events have happened in Karur district, in 2020, here we have the list.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X