கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சட்டையை கழற்றி விட்டு கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்.. கொல்ல முயல்வதாக பரபரப்பு புகார்

கரூர் கோர்ட்டில் போராளி முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Activist Mukilan : கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன்..பரபரப்பு புகார்- வீடியோ

    கரூர்: உடம்பில் சட்டையே இல்லாமல் கரூர் கோர்ட்டில் இன்று ஆஜரானார் முகிலன்.. அப்போது, ஜெயிலிலேயே வைத்து என்னை கொல்ல பார்க்கிறார்கள் என்று புகார் அளித்துள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி சென்னை எக்மோர் ஸ்டேஷனில் மாயமானார்.

    அவரை சிபிசிஐடி போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 6-ந்தேதி திருப்பதி ரெயில்வே ஸ்டேஷனில் போலீசார் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    ஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ!ஒருவர் கத்தியால் வெட்ட.. இன்னொருவர் செல்போனை பிடுங்க.. வயிற்றில் புளியை கரைக்கும் பரபரப்பு வீடியோ!

     ராஜேஸ்வரி

    ராஜேஸ்வரி

    எழும்பூர் சிபிசிஐடி ஆபீசிலும் வைத்து விசாரணை நடத்தினர். முகிலனை யார் கடத்தியது, யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார், இவ்வளவு காலம் எங்கிருந்தார் என்ற விவரங்கள் வெளியே தெரியும் முன்னரே, ராஜேஸ்வரி என்ற பெண் அளித்த பாலியல் புகாரில் முகிலன் கைது செய்யப்பட்டார்.

     ஆஜர்

    ஆஜர்

    இதையடுத்து கடந்த 9-ந்தேதி நடுராத்திரி கரூர் மாஜிஸ்திரேட் விஜயகார்த்திக் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட முகிலனை, 24-ம் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த பாலியல் புகாரில் முகிலனை காவலில் எடுத்து விசாரிக்க கரூர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தார். அது தொடர்பான விசாரணைக்கு முகிலன் கோர்ட்டுக்கு நேற்று வந்திருந்தார்.

     வெற்று உடம்பு

    வெற்று உடம்பு

    அப்போது முகிலன் சட்டை அணியாமல், வெற்று உடம்புடன் வந்திருந்தார். கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட போது, "ஜெயிலில் வைத்து போலீசார் என்னை தாக்கினார்கள், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயிலில் உண்ணாவிரதம் இருக்கிறேன்" என்று முழக்கமிட்டார். இருந்தாலும் போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

     புகார்

    புகார்

    அப்போது நீதிபதி, "ஒருநாள் மட்டும் உங்களை விசாரிக்க அனுமதி தருகிறேன். ஆனால் நீங்கள் சாப்பிட வேண்டும். உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்" என்றார். ஆனால் இதை முகிலன் மறுத்துவிட்டார். தன் புகாரையும் எழுத்து மூலமாக எழுதி தந்தார்.

    சட்டை

    சட்டை

    இதன் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. முகிலனை போலீசார் பாதுகாப்புடன் கரூர் கோர்ட்டுக்கு வேனில் அழைத்து வந்தனர். அப்போது, வேனில் இருந்து இறங்கிய முகிலன் திடீரென தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி முழக்கம் எழுப்பினார்.

    கொல்ல சதி

    கொல்ல சதி

    "கைது செய், கைது செய், ஜெயிலில் தன்னை தாக்கிய போலீசாரை கைது செய், 13 பேரை கொலை செய்த ஐ.ஜி. சைலேந்திரகுமார் யாதவ்வை கைது செய்.." என்று முழக்கமிட்டதுடன், "ஜெயிலில் வைத்து என்னை கொலை செய்ய அரசு சதி திட்டம் தீட்டுகிறது என்றும் புகார் சொன்னார். ராம்குமாரை ஜெயிலில் வைத்து கொன்று விட்டனர், சிறையில் தடுக்கி விழுந்து இறந்தார், மின்சாரம் தாக்கி இறந்தார் என்று சொல்வதெல்லாம் சதி என்று சத்தமாக சொல்லி கொண்டே இருந்தார். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மூன்றரை மணி நேரம்

    மூன்றரை மணி நேரம்

    இதையடுத்து முகிலனை நேற்று போவே இன்றும் போலீசார் குண்டுகட்டாக தூக்கிச்சென்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரிடம் நீதிபதி விஜயகார்த்திக் விசாரணை நடத்தினார். அப்போது மூன்றரை மணி நேரம் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அதன்படி பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    English summary
    Activist Mukilan complaint against Tn gov and Police in the Karur Court Campus today
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X