கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னய்யா இது.. கூட இருந்த ஒருத்தரையும் காணோம்.. தனித்து விடப்பட்ட அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர்

Google Oneindia Tamil News

கரூர்: அரவக்குறிச்சி இடைத் தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலேயே அதிமுக வேட்பாளர் செந்தில் நாதன் தனித்து விடப்பட்டாராம்.

நேற்று நடைபெற்று முடிந்த அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் செந்தில்நாதன். நேற்று வரை இவருடன் ஒட்டியிருந்த கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இன்று திரும்பிக்கூட பார்க்கவில்லையாம்.

admk candidate stranded in aravakurichi

செந்தில்நாதன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சாய்ஸ் இல்லையாம். அதனால் தேர்தல் பணிகளில் கூட எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவரது ஆதரவாளர்களும் அடக்கியே வாசித்தார்களாம். அமைச்சர் தங்கமணி தான் பணிகளை இழுத்துப்போட்டு பார்த்தாராம்.

admk candidate stranded in aravakurichi

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இன்று காலை 7 மணிக்குத் தான் குமாரசாமி பொறியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டனவாம். அங்கு வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறை சீலிடப்பட்டதாம். செந்தில்பாலாஜி, சாகுல்ஹமீது உள்ளிட்டோர் கட்சியினர் புடைசூழ வந்து சீலிடுவதை பார்த்துசென்றார்களாம்.

1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு! 1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு!

ஆனால் ஆளும் கட்சியான அதிமுக தரப்பில் இருந்து ஒரு ஒன்றியச்செயலாளர் மட்டுமே வந்திருந்தாராம். வேட்பாளர் வர மாட்டார் நான் அவர் பிரதிநிதி எனக் கூறியதால் அந்த நபர் முன்னிலையிலேயே அறை சீலிடப்பட்டதாம். பிறகு 11 மணியளவில் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு தனியாக வந்தாராம்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் வைத்து பூட்டப்பட்டதாக அதிகாரிகள் கூறியதை கேட்டு, அடுத்த 3 நிமிடத்தில் புறப்பட்டு விட்டாராம். நேற்று வரை பத்து பேருடன் பவுசாக வலம் வந்துவிட்டு இன்று செந்தில்நாதன் தனியாக சுற்றுவதை பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது என அங்கிருந்த திமுகவினர் கமெண்ட் அடித்தனர்.

English summary
ADMK candidate Senthilnathan was left stranded in Aravakurichi after the end of the by election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X