கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

250 குடும்பங்களுக்கு.. அரிசி பருப்பு புளி பூண்டு சீரகம்.. மூதாட்டிகளுக்கு போர்வை.. அசத்தல் உதவி!

Google Oneindia Tamil News

கரூர்: கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் , வரவனை ஊராட்சியில் 250 குடும்பங்களுக்கு பல்வேறு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Recommended Video

    250 குடும்பங்களுக்கு.. அரிசி பருப்பு புளி பூண்டு சீரகம்.. மூதாட்டிகளுக்கு போர்வை.. அசத்தல் உதவி - வீடியோ

    பசுமைக்குடி மற்றும் மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறவாரியம் இணைந்து இன்று கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் , வரவனை ஊராட்சியில் 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, புளி, பூண்டு, சீரகம், மிளகாய் தூள், ஆகியவை வழங்கப்பட்டது.

    big help extended to villages near karur

    இதில் வரவணை ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி கரூர் மாவட்ட துணை ஆட்சியர் ரங்கராஜ், தாசில்தார் மைதிலி , வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன், வருவாய் ஆய்வாளர் பாலச்சந்திரன், கிராம நிரவாக அலுவலர் ரஞ்சித் குமார் முன்னிலையில் பசுமைக்குடி தன்னார்வலர்கள் பி.முருகேசன், பி.கருணாநிதி, ர. வேல்முருகன், த.காளிமுத்து, ரா.பாலகிருஷ்ணன், கா.கவினேஷன், ல.கார்த்திகேயன் கோ.தங்கவேல், து.வெற்றிவேல், பொ. ஈஸ்வரன், ரா.மணிவேல், பொ. சந்தனக்குமார், ரா.மகாமுனி, ர. அன்புமணி, பா.லட்சுமி ஆகியோரால் வழங்கப்பட்டது.

    big help extended to villages near karur

    இவ்விழாவில் அரசு மருத்துவர் கொரோனோ நோய் பற்றி மக்களுக்கு விளக்கமாக கூறினார். சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப்பட்டது. மேலும் துணை ஆட்சியர் ரங்கராஜ் அவர்களால் மூதாட்டிகளுக்கு இலவசமாக போர்வைகளை வழங்கினார். மாணவர்கள் கல்வி மற்றும் ஆய்வறிவு அறவாரியம் வேலாயுதம் அண்ணண், எரிமலை ரத்தினம் ஐயா மற்றும் அதன் அனைத்து அங்கத்தினர்களுக்கும் நன்றியினை சமர்ப்பிக்கிறேன்.

     தாராள உதவி செய்யுங்கள்.. எங்களிடமும் சொல்லுங்கள்.. இணைந்து இயலாமையை வெல்லுவோம் தாராள உதவி செய்யுங்கள்.. எங்களிடமும் சொல்லுங்கள்.. இணைந்து இயலாமையை வெல்லுவோம்

    கொரோனா சிக்கலில் மக்கள் பல இன்னல்களை அனுபவிக்க நேரிடுகிறது அனைவரும் அறிவர். தொடர் ஊரடங்கு மூலம் வேலைக்கு செல்ல முடியாமல் இருக்கும் இச்சூழலில் சிறு உதவியாக இதனை செய்கிறோம். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பொருட்களை வாங்கி அதனை பிரித்து இன்று நம் ஊர் மட்டுமல்லாது மற்ற ஊர்களில் இருப்பவர்கள் பட்டியல் தயார் செய்து என்று பல பணிகள் பசுமைக்குடி இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டது.

    big help extended to villages near karur

    பசுமைக்குடி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றியினை சமர்ப்பிக்கிறேன். பொருட்கள் வாங்க உதவிய காவல்துறையை சேர்ந்த சுந்தரி, கஜேந்திரன் ஆகியோருக்கும் நன்றி என்று நமக்கு செய்தியை அனுப்பி. கே. நரேந்திரன் தெரிவித்துள்ளார்.

    பசுமைக்குடி நல்லுள்ளங்களுக்கு பாராட்டுகள்.

    English summary
    150 families were given help from Pasumaikudi friends in Karur district.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X