• search
கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தூக்கி போட்டு அடிப்பேன் என செந்தில் பாலாஜியை மிரட்டிய அண்ணாமலை... பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு

|

கரூர்: அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை தூக்கிப் போட்ட மிதிப்பேன் என்று மிரட்டிய புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் பாஜகவின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் மொச்சனூர் ஆர்.இளங்கோ போட்டியிடுகிறார்.

தேர்தல் பிரசாரத்தில் பேசிய அண்ணாமலை, எனக்கு இன்னொரு முகம் இருக்கு... அது கர்நாடகா முகம். அதை இங்கே காட்ட வெண்டாம் என்று நினைக்கிறேன்" என்று கூறியதோடு திமுகவைச் சேர்ந்த செந்தில் பாலாஜிக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக ஒருமையில் பேசினார்.

அண்ணாமலை தோல்வியா?

அண்ணாமலை தோல்வியா?

அண்ணாமலை பிரசாரம் செய்த போது, செந்தில் பாலாஜியை கடுமையாக தாக்கி பேசினார். பணம் கொடுத்து செய்தித்தாளில் அண்ணாமலை அரவக்குறிச்சியில் தோல்வியடைவார் என்று போட்டுக்கோடா, என்ன வேண்டுமானலும் போட்டுக்கோடா. தனிமனித தாக்குதல் எதற்கு பண்ற? பாரத பிரதமர் மீது எதற்கு தனிமனித தாக்குதல் பண்ற? அவர் ஏதாவது தப்பு பண்ணாரா? என்று கேள்வி எழுப்பினார்.

எனக்கு பெருமை

எனக்கு பெருமை

அவர் என்ன ஊழல்வாதியா இருந்தாரா? அவர் மீது ஒரு ரூபாய் ஊழல் சொல்லு? நான் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் சிஷ்யன் என்று சொல்வதில் எனக்கு பெருமை என்றும் கூறினார். அது உனக்கு பிரச்சினையா? பிரச்சினையா இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் என்றும் சொன்னார்.

நான் இங்கே நிற்பேன்

நான் இங்கே நிற்பேன்

என்னை எலக்‌ஷன்ல் தோற்கடிப்பியா? தோற்கடிச்சுட்டு போய்க்கோ. ஆள் வச்சு பூத் செட் பண்ணுவியா செட் பண்ணிட்டு போய்க்கோ. கள்ள ஓட்டு போடுவியா போட்டுக்கோ. அதற்கெல்லாம் நான் பயப்படுற ஆள் நான் கிடையாதுங்க. என்ன நடந்தாலும் இந்த அண்ணாமலை ஏப்ரல் 6ம் தேதி வரை இந்த அண்ணாமலை இங்கே நிப்பான். அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஒரு இன்ச் பின்னாடி போகாது.

கட்சிக்காரனை அடிப்பதா

கட்சிக்காரனை அடிப்பதா

என்ன வேண்டுமானாலும் தாக்குதல் நடத்திக்க. நீ கட்சிக்காரன அடிச்சதா இதுவரைக்கு 7 எஃப்.ஐ.ஆர் பதிவாகியிருக்கு. யாராவது போஸ்டர் ஒட்டினால், நைட்டு போஸ்டரை கிழிக்கிறது. கட்சிக்காரங்களை கை வைக்கிறது. கனிமொழி வந்துவிட்டு போன அன்று 2 கட்சிக்காரங்க மண்டைய ஒடைச்சிருக்கீங்க. இந்த அண்ணாமலை வன்முறையை ஆரம்பித்து திரும்ப நான் கை வைத்துவிட்டால்..டேய்! உன்ன மாதிரி நான் எவ்வளவு பேரை தூக்கி போட்டு மிதிச்சிருப்பேன். அரசியலுக்கு வந்த பிறகு, அமைதியா இருக்கேன்.

நீயெல்லாம் ஒரு ஆளு

நீயெல்லாம் ஒரு ஆளு

செந்தில் பாலாஜியை எல்லாம் தூக்கிபோட்டு மிதித்தேன் என்றால் பல்லு எல்லாம் வெளியே வந்துவிடும். அது மாதிரி எவ்வளவு பெரிய ஃபிராடு எல்லாம் பார்த்துவிட்டு வந்திருப்பேன் நான். நீங்கல்லாம் ஒரு ஆளுக. நீங்கல்லாம் ஒரு இது. உங்களுக்கு பயந்து நான் கை வைத்தால், நீ வயலன்ஸ் பண்ணி அண்ணாமலை வயலன்ஸ் பண்றார்னு மாத்துவியாம். அதனால், இங்கே இருக்கிற திமுககாரனுக்கு எச்சரிக்கை வைத்துவிட்டு போகிறேன். நான் வன்மத்தை கையிலெடுக்க தயாராக கிடையாது. அஹிம்சைவாதியாக அரசியல் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னார்.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

எனக்கு இன்னொரு முகம் இருக்கு. அது கர்நாடகா முகம். அந்த முகத்தை இங்கே காட்ட வேண்டாம்னும் நினைக்கிறேன். வந்து வீடியோ எடு.. எடுத்துட்டுப்போ... எலக்‌ஷன் கமிஷன் கிட்ட கொடுப்பியா? இதற்கெல்லாம் நான் பயப்படுகிற ஆளா நான் என்று கேட்டார். அண்ணாமலையின் இந்த சர்ச்சை பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

தொட்டுப்பார் தம்பி

தொட்டுப்பார் தம்பி

அண்ணாமலையின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என்று கூறிய கனிமொழி, அண்ணாமலை என்று பெயர் இருப்பதால் அவருக்கு ரஜினி என்ற நினைப்பு போல என்றும் கூறினார். தி.மு.க உடன் பிறப்புகளை யாரும் மிரட்ட முடியாது. இது தமிழ்நாடு. இங்கு வச்சுக்க வேண்டாம், எங்கே யார், எதை பேச வேண்டும் என்று தெரிந்து பேச வேண்டும்; நாவடக்கம் வேண்டும் என்றும் தேர்தல் பிரசாரத்தில் பேசினார் கனிமொழி.

3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

இதனிடையே அண்ணாமலை வன்முறையை தூண்டும் விதமாகவும் செந்தில்பாலாஜியை மிரட்டும் விதமாக பேசியதாக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
A case has been registered at the Aravakurichi police station on three counts, including threatening to kill BJP candidate Annamalai, on a complaint that he threatened to step on DMK candidate Senthil Balaji. Former IPS officer K Annamalai who is making his poll debut as BJP's candidate for Aravakurichi constituency issues warning to DMK cadres who attempt to incite violence, says he believes in Ahimsa and doesn't want to show his Karnataka face here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X