கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராகுலுக்காக திடீரென்று முளைத்த பிளக்ஸ்கள்.. கோர்ட் உத்தரவை காற்றில் பறக்க விட்ட காங்.!

Google Oneindia Tamil News

கரூர் : ராகுல் காந்தியை வரவேற்பதற்காக நீதிமன்ற உத்தரவை மீறி சென்டர் மீடியேட்டரில் பிளக்ஸ்கள் அமைக்கப்பட்டிருந்தன.

கரூர் மாவட்டத்திற்கு ராகுல்காந்தி இன்று வருகையை ஒட்டி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நீதிமன்ற உத்தரவை மீறி சென்டர் மீடியேட்டரில் திடீரென்று ராட்சத மோட்டர்களை கொண்டு சாலையினை குடைந்து, விபத்தை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ் வைத்துள்ளது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

Congress workers violating court rules and arranging flex boards for welcoming Rahul gandhi

கரூர் பேருந்து நிலையம் முதல் திருக்காம்புலியூர் ரவுண்டானா, கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி இன்று கரூர் வருகிறார். இதற்காக கட்சி சார்பில் நேற்று வரை எந்த ஒரு வரவேற்பும் செய்யாமல் திடீரென்று இரவோடு இரவாக நீதிமன்ற உத்தரவை மீறி ஆங்காங்கே பிளக்ஸ் பேனர்களை ராகுல்காந்தியின் மனதை குளிர்விக்கும் வகையில் வைத்துள்ளனர்.

மேலும் சென்டர் மீடியேட்டரில் தட்டி போன்ற பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சென்டர் மீடியேட்டர் பகுதியில் குழாய் அமைக்கப்பட்டு அதில் கட்சி கொடியை வைப்பதற்காக அமைத்துவிட்டு அதில் வைக்காமல் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டில் துளையிட்டு கட்சி கொடியை நட்டு வைத்துள்ளனர்.

இதனால் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பொது மக்கள் மீதோ வாகன ஓட்டிகள் மீதோ அக்கறை கொள்வதைவிட ராகுல் காந்தியை வரவேற்று எம்.பி பதவியையும், கட்சி பதவியையும் காப்பாற்றி கொள்ளவே ஆர்வம் காட்டியுள்ளனர்.

ஒரு சிலர் போஸ்டர்கள் அடித்துள்ள நிலையில் பலர் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையினை துளையிட்டு, அதில் கட்சி கொடியினையும், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதோடு, விபத்தினை ஏற்படுத்தும் வகையில் பிளக்ஸ்
வைத்துள்ளது பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது. இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

English summary
Congress workers violating court rules and arranging flex boards for welcoming Rahul gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X