கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கரூரில் அத்தியாவசிய பொருட்கள் டோர்டெலிவரி- அசத்தும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் எம்ஆர்வி. டிரஸ்ட்

Google Oneindia Tamil News

கரூர்: லாக்டவுன் நடைமுறையில் இருக்கும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி வழங்கி வருகிறது கரூர் எம்.ஆர்.வி. டிரஸ்ட்.

Recommended Video

    கொரோனா வைரஸின் வீக் பாயிண்டை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
    Corona Lockdown: Karur MRV Trust supplies free door delivery of grocery materials

    கொரோனா தொற்று நோயைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கான மளிகை கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் கிடைப்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் கரூர் எம்.ஆர்.வி. அறக்கட்டளை களமிறங்கி செயல்பட்டு வருகிறது. எம்.ஆர்.வி. அறக்கட்டளை வழங்கியுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைத்து அத்தியாவசியப் பொருட்களின் தேவையை தெரிவித்தால் போதும்.

    Corona Lockdown: Karur MRV Trust supplies free door delivery of grocery materials

    பொதுமக்களின் வீடுகளைத் தேடி கரூர் எம்.ஆர்.வி. டிரஸ்ட் பணியாளர்கள் நேரில் வழங்குகின்றனர். இந்த பணியில் 300க்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த டோர் டெலிவரியை எம்.ஆர்.வி. டிரஸ்ட் இலவசமாகவே செய்து வருகிறது.

    நீங்கள் கரூர் நகராட்சிக்குட்பட்டவர்கள் எனில் இந்த சேவையை பயன்படுத்தலாம்

    Corona Lockdown: Karur MRV Trust supplies free door delivery of grocery materials

    தொலைபேசி எண் : 9600299599, 9514335577, 9842363738, 9698001188
    சேவை நேரம் : காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை

    English summary
    Karur MRV Trust supplied free door delivery of grocery materials for public.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X