கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நடுராத்திரி.. காவிரி ஆற்றில்.. ஆளுங்கட்சியினர் அட்டூழியம்.. செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

ஆற்றுமணலை கள்ளத்தனமாக அதிமுகவினர் அள்ளுவதாக செந்தில்பாலாஜி கூறிஉள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    காவிரி ஆற்றில் ஆளுங்கட்சியினர் மணல் அள்ளுவதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டு-வீடியோ

    கரூர்: நடுராத்திரி.. காவிரி படுகையில்.. இரவு நேரங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அதிலும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆத்துக்குள்ளேயே ஜேசிபி எந்திரங்களை வைத்து, லாரிகளில் மணல் அள்ளுவதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டி உள்ளார்.

    கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆறுகளில் உள்ளூர் கட்டுமான பணிகள் தேவைக்காக மணல் அள்ள அனுமதிக்க வேண்டி மாவட்ட கலெக்டர் அன்பழகனை கரூர் எம்பி ஜோதிமணியும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியும் சந்தித்து மனு ஒன்றினை தந்தனர்.

    DMK MLA Senthil Balaji slams AIADMK about sand in trucks

    அதில், காவிரி அமராவதி ஆறுகளில் உள்ளூர் தேவைக்கு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அனுமதி பெறுவோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அன்பழகனும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    சிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்சிரித்துகொண்டே போனோம்.. சிரித்துகொண்டே வந்தோம்.. மக்களும் சிரித்து கொண்டே இருந்தனர்.. மரண கலாய் மீம்

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த,செந்தில் பாலாஜி சொன்னதாவது: காவிரி அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். வருகிற ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்காவிட்டால், திங்கட்கிழமை நீதிமன்றத்தை நாடி மணல் அள்ளுவதற்கு அனுமதி பெறுவோம்.

    நடுராத்திரி.. காவிரி படுகையில்.. இரவு நேரங்களில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள், அதிலும் பொறுப்பில் உள்ளவர்கள் ஆத்துக்குள்ளேயே ஜேசிபி பொக்லைன் மூலம் லாரிகளில் மணல் அள்ளுகின்றனர். இதற்கு வருவாய்துறை துணை போகிறது. அதை காவல்துறையினர் மாவட்ட எல்லை வரை கொண்டு செல்கின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.

    English summary
    DMK Aravakurichi MLA Senthil Balaji says about sand in trucks from the Cauvery River Basin
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X