கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மு.க.ஸ்டாலின் அன்பு கட்டளை... திமுக கூட்டணி எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் செய்து முடிப்பார்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin: ஆட்சி மாற்றம் உறுதி! கொங்கு மண்டலத்தில் ஸ்டாலின் பேச்சு- வீடியோ

    அரவக்குறிச்சி: தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களை நாடி வந்து பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பார்கள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கரூர் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜோதிமணியும், அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜியும் வெற்றி பெற்றனர்.

    இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி புங்கம்பாடி பிரிவு, பள்ளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
    இதனைத் தொடர்ந்து, பள்ளபட்டியில் திருமண உதவி தொகை, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

    சட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.. முக ஸ்டாலின் சூசகம்சட்டமன்றத்தை கூட்டினால் மக்களுக்கு கூடிய விரைவில் நல்ல செய்தி வரும்.. முக ஸ்டாலின் சூசகம்

    மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க.தான் வெற்றி பெறப்போகிறது. அப்போது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    நல்ல செய்தி வந்து சேரும்

    நல்ல செய்தி வந்து சேரும்

    தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பொதுமக்கள் யாரும் தேடிச்செல்ல வேண்டாம். அவர்களே உங்களை நாடி வந்து பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்பார்கள் என்றும் பேசினார். முன்னதாக, தமிழக சட்டசபையைக் கூட்டினால், ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அதிமுக அஞ்சுகிறது. சட்டசபையை கூட்டினால் மக்களுக்கு நன்மை தரும், நல்ல செய்தி வந்து சேரும் என்றார்.

    மரண அடி கொடுப்போம்

    மரண அடி கொடுப்போம்

    மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று, ஆளுங்கட்சிக்கு எப்படி மரண அடி கொடுத்திருக்கிறோமோ, இனி எந்த தேர்தல் வந்தாலும், மீண்டும் மரண அடி கொடுப்போம். விரைவில் சந்திக்க இருக்கக்கூடிய உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் அல்லது சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் அதிலும் வெற்றி பெற்று நிரூபித்து காட்டுவோம்.

    உரிய தண்டனை

    உரிய தண்டனை

    மக்களுக்கு எதிரான திட்டங்களான ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழி சாலை திட்டம் போன்றவற்றை செயல்படுத்த அதிமுக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    English summary
    MK Stalin said that DMK MLA's, MP's will seek the public and solve the problems.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X