கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தம்பிதுரை ரூ.1000க்கு கம்மியா கொடுத்தா வாங்காதீங்க.. செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை

Google Oneindia Tamil News

Recommended Video

    ஓட்டுக்கு பணம் வாங்கணுமா?-செந்தில் பாலாஜி பேச்சால் சர்ச்சை-வீடியோ

    கரூர்: கரூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரையிடம் ரூ.1000க்கு குறைவாக வாக்காளர்கள் வாங்க கூடாது என முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

    கரூர் மக்களவை தொகுதியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஜோதிமணி போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக மாவட்ட பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி பிரச்சாரம் செய்து வருகிறார்.

    Dont get below Rs.1000 from thambidurai, says senthil balaji

    இந்நிலையில் கரூர் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், மக்களவை துணை சபாநாயகராக இருந்த தம்பித்துரை தொகுதி மேம்பாட்டு நிதியினை முறையாக பயன்படுத்தவில்லை. கடந்த இரண்டு தேரத்லில் அவருக்காக வாக்கு கேட்டு வந்ததுக்காக என்னை மன்னித்துவிடுங்கள்.

    சட்னி அரைக்கிறார்.. குப்பை அள்ளுகிறார்.. பாட்டிகளிடம் பாசமாக பேசுகிறார்.. அசத்தும் மன்சூர் அலிகான் சட்னி அரைக்கிறார்.. குப்பை அள்ளுகிறார்.. பாட்டிகளிடம் பாசமாக பேசுகிறார்.. அசத்தும் மன்சூர் அலிகான்

    மத்திய அரசு ஒதுக்கிய தொகுதி நிதியை தவிர வேறு என்ன சிறப்பு திட்டத்தை கரூக்கு தம்பித்துரை கொண்டுவந்தார். எதுவுமே கொண்டுவரவில்லை. அவர் ஒவ்வொரு வாக்களார்களுக்கும் 1000 ரூபாய் கொடுக்க சொல்லியிருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது.

    எனவே அவர் ரூ.1000 க்கு குறைவாக கொடுத்தால் வாங்காதீங்க. தம்பித்துரைக்கு சொந்தமாக நிறைய கல்லூரிகள் இருக்கு. அவர் தன்னுடைய கல்லூரிகளில் யாராவது ஒரு மாணவ-மாணவிக்கு இலவசக் கல்வி கொடுத்திருக்காறா? இவ்வாறு செந்தில் பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    English summary
    karur dmk district leader senthil balaji says, Don't get below Rs.1000 from thambidurai,
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X