கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மக்கள்தான் முதல்வர்... என்னை முதல்வராக நினைக்கவில்லை.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Google Oneindia Tamil News

கரூர்: மக்கள் தான் முதல்வர் என்றும் என்னை முதல்வராக நினைக்கவில்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் மே 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் உள்ளிட்ட நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

Edappadi palanisamy says, People is CM, I am not feel like CM

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அரவக்குறிச்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து தளவாய் பாளையம், புன்னம் சத்திரம், எல்லமேடு, வேலாயுதம் பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை தீவிர பிரச்சாரம் செய்தார்.

மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா.. நெட்டிசன்களை விளாசிய வெதர்மேன் மழை முக்கியம் இல்ல.. மேட்ச் தான் உங்களுக்கு முக்கியமா.. நெட்டிசன்களை விளாசிய வெதர்மேன்

அப்போது எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், அரவக்குறிச்சியில் கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து குளங்களும் தூர் வாரப்படும்.

அதிமுகவை உடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுடன் இணைந்து செந்தில் பாலாஜி இங்கு தேர்தலில் போட்டியிடுகிறார். 18 தொகுதி இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றிடுவோம் என கூறும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஏன், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டுவருகிறார்., இதற்கு தோல்வி பயம் தான் காரணம். இங்கு மக்கள் தான் முதல்வர். என்னை நான் என்றுமே முதல்வராக நினைக்கவில்லை" இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

English summary
Tamil Nadu CM Edappadi palanisamy says, People is CM, I am not feel like CM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X