கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங். வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின்பேரிலேயே என்னை மிரட்டினர்.. கரூர் கலெக்டர் விளக்கம்

Google Oneindia Tamil News

கரூர்: திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தூண்டுதலின் பேரில் கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அன்பழகனை நடு இரவில் மிரட்டியதாக புகார் அளித்தார்.

கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவருமான அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் நள்ளிரவு 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் எனது குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்தனர்.

Election officer complaints he has death threat from Karur Congress and DMK

எனது உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டனர். இது சம்பந்தமாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அவரே என்னை வந்து மீட்டார்.

லோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது?.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!லோக்சபா தேர்தல்.. உங்கள் வாக்குச்சாவடி எங்கே இருக்கிறது?.. தெரிந்து கொள்ள இதை படியுங்கள்!

முன்னதாக நேற்று இரவு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு நாளில் கரூர் நகர் பகுதியில் நடத்திட அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அதனை பரிசீலிப்பதாக கூறியிருந்தேன்.

இதை அடுத்து கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி, கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் தூண்டுதலின் பேரில் வழக்கறிஞர் செந்தில் என்பவரும் 100-க்கும் மேற்பட்ட நபர்கள் அறிவுறுத்தலின் பேரில் என்னை தாக்க முற்பட்டதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Election officer complaints that he has death threats from Karur Congress and DMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X