கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு

பாலபாரதியுடன் டோல்கேட் ஊழியர்கள் வாக்குவாதம் செய்தனர்

Google Oneindia Tamil News

கரூர்: "என்னை துப்பாக்கியை காட்டி மிரட்டினாங்க.. மாவட்ட சுங்க சாவடி ஊழியர்கள் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தரமான சாலை வேண்டும் என்றால் சுங்கக் கட்டணம் செலுத்தியே ஆக வேண்டும் என்று அன்று நிதின் கட்கரி தெரிவித்ததில் இருந்தே.. இந்த கட்டணத்துக்கு எதிர்ப்புதான்.

பல கட்சிகள் சுங்க சாவடி கட்டணத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னிறுத்தி வருகின்றன. அதனால்தான், அரசியல் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் இந்த டோல்-கேட்டை கடந்து செல்லும்போது, பெரும்பாலும் கட்டணம் செலுத்துவதே இல்லை. இதனால் ஆங்காங்கே தகராறுகளும் ஏற்பட்டுள்ளன.

என்னது.. பிரேக் பிடிக்கலையா.. ஸ்டியரிங் வீலை பிடித்து.. பஸ்ஸை ஓட்டிய ஷிகா.. ஐஏஎஸ் அதிகாரியின் தில்! என்னது.. பிரேக் பிடிக்கலையா.. ஸ்டியரிங் வீலை பிடித்து.. பஸ்ஸை ஓட்டிய ஷிகா.. ஐஏஎஸ் அதிகாரியின் தில்!

பாலபாரதி

பாலபாரதி

இப்போது, மாஜி எம்எல்ஏ பாலபாரதிக்கும் இப்படி ஒரு நிகழ்வை சந்தித்துள்ளார்.. ஈரோடு மாவட்டத்தில் சிபிஎம் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி சென்றார்.. மாருதி ஆல்டோ காரில் அவர் ஈரோடு வந்தார்.

அனுமதி கிடையாது

அனுமதி கிடையாது

அப்போது, மணவாசி டோல்கேட் வழியே இலவசமாக அவர் செல்ல முயன்றதாகவும், அதற்கு "முன்னாள் எம்எல்ஏக்கு இலவச அனுமதி கிடையாது" என்று ஊழியர்கள் சொல்லி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், பாலபாரதியுடன் வந்த கட்சியினர் சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.. தகவலறிந்து மாயனுார் போலீசார் சுங்கச்சாவடி அதிகாரிகள் விரைந்து வந்து, பாலபாரதியிடம் பேச்சு நடத்தினர்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அப்போதும், சுங்க கட்டணம் தர முடியாது என்று பாலபாரதி சொல்லியதால், "எம்எல்ஏ" என பதிவுசெய்து இலவச அனுமதி வழங்கியதாக சொல்கிறார்கள். கிட்டத்தட்ட அரை மணிநேரம் இந்த வாக்குவாதம் காரணமாக அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மணவாசி சுங்கசாவடி

மணவாசி சுங்கசாவடி

ஆனால், நடந்த இந்த சம்பவம் குறித்து பாலபாரதி ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "மணவாசி சுங்கசாவடி அருகே என் கார் வந்தது.. என்னுடைய அனுமதி சீட்டினை காட்டியபோது, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.. அதோடு எங்களது டிரைவரிடம் அவர்கள் மரியாதைக்குறைவாக பேசினார்கள். அதனால் என்னுடைய டிரைவர் காரை எடுக்கமுடியாது என்று சொன்னார்.

மிரட்டல்?

மிரட்டல்?

உடனே சுங்கச்சாவடி ஆபீசில் இருந்து இரட்டைக்குழல் துப்பாக்கியுடன் ஒருவர் வந்து என் கார் முன்னாடி நின்றுவிட்டார்.. அது மிரட்டல் தொணியில் இருந்தது. அப்படி துப்பாக்கியுடன் நின்றவர் கன்மேன் என்று சொன்னார்கள்.. கன்மேன் என்றால், பணத்தை எடுத்து செல்லும் போது மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும்... இவர் ஏன் சுங்க வரி செய்யும் இடத்திற்கு வருகிறார் என்று தெரியவில்லை.. இதற்கு உரிய அனுமதி பெற்றுள்ளனரா? என்பதும் தெரியவில்லை.

கன்மேன் எதற்கு?

கன்மேன் எதற்கு?

அந்த சுங்கசாவடிகளில் சமூக விரோதிகள் பயங்கர ஆயுதங்களுடன் உட்கார வைத்திருக்கிறார்கள்.. யாராச்சும் கேள்வி கேட்டால் பணத்தை கொள்ளையடிக்க வந்ததாக சுட்டு கொன்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன். தமிழக அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த சுங்கசாவடிகள் இருக்கிறதா?

சுங்கசாவடிகள்

சுங்கசாவடிகள்

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் சிபிஎம் கட்சி சார்பில் புகார் அளிக்க உள்ளோம்.. இப்படித்தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் நுழைய பல்வேறு சுங்க கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. வடமாநிலங்களிலும்சரி, கேரளாவிலும் சரி... பெரும்பாலான சுங்கசாவடிகள் இல்லை. அதனால், நம் மாநிலத்திலேயும் சுங்கசாவடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறோம்" என்றார்.

English summary
ex cpm mla balabharathi argued with manavasi tollgate employees near trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X