கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூக்கி வாரிய கொண்டை.. முரட்டு உடம்பு.. ரதியை பார்த்தா.. மெய்யாலுமே போலீஸ் மாதிரியே இருக்காரே!

கரூரில் பெண் போலீசாக நடித்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார்

Google Oneindia Tamil News

கரூர்: தூக்கி வாரிய கொண்டை, காக்கி சட்டை, பிரேஸ்லெட், கையில் லத்தி என மெய்யாலுமே பெண் போலீஸ் போலவே இருக்கும் ரதியை கண்டு போலீசாரே கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டனர்.
கரூர் தெற்கு காந்திகிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்.. 35 வயதாகிறது.. பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக தாந்தோணி மலையில் ஒரு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வார்.. அந்த ஜிம் ஓனரின் பெயர் ரமேஷ்.. 28 வயதாகிறது.

கடந்த 15 நாட்களாக சுரேஷ் ஜிம் ஃபீஸ் கட்டவில்லை என்று கூறப்படுகிறது... அதனால் பீஸ் கட்டுவது தொடர்பாக 2 பேருக்கும் பிரச்சனை வந்தது.. அந்த விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது.

 fake police woman arrested near karur, and photos viral on socials

இந்நிலையில் ரமேஷ், தான்தோன்றிமலை போலீசில் ஒரு பரபரப்பு புகார் தந்தார்.. அதில், ஒரு பெண் உட்பட 3 போலீசார் தன்னை அரசு கலைக் கல்லூரி பஸ் ஸ்டாண்டில் ஒரு காரில் வந்து லத்தியால் அடித்தனர் என்றார்.

இந்த புகாரை கேட்ட போலீசாருக்கு குழப்பம் வந்தது.. லத்தியால் அடிக்கிறார்கள் என்றால் யாராக இருக்கும் என்று விசாரணையை ஆரம்பித்தனர்... விடுவார்களா நம் போலீஸ், சம்பந்தப்பட்ட 3 பேரை சுற்றி வளைத்துவிட்டனர்.

கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம் கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்

அதில் ஒருவர் ரதி.. இவர் பெண் போலீஸ் என்று சொல்லி ஊரையே ஏமாற்றி வந்துள்ளார்.. ரதி தன்னை திருச்சி கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் என்று ரீல் விட்டுள்ளார்.. சரவணகுமார் ஏட்டு என்று ஏமாற்றி உள்ளார்.. இவர்கள் 2 பேரையும் ரமேஷ் அழைத்து கொண்டு, சுரேஷை மிரட்டி அடித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தாந்தோனிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ரதி ,சரவணகுமார், ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. ரதி பார்ப்பதற்கு நிஜமாகவே போலீஸ் போலவே இருக்கிறார்.. ஆனால் கையில் மோதிரம், கழுத்தில் செயின், பிரேஸ்லெட் என தகதகவென மின்னுகிறார்.. இப்போது 3 பேரும் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.

Recommended Video

    40 year old woman attacked a person who misbehave in vellore gov hospital

    கொரோனா கொடூரம்- 22 வயது திண்டுக்கல் இளைஞர் திருப்பூரில் மரணம்

    English summary
    fake police woman arrested near karur, and photos viral on socials
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X