கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சார் பேரு டிவன் காந்த்.. செஞ்ச வேலையை பாருங்க.. அப்படியே ஷாக் ஆயிருவீங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    மக்களை ஏமாற்றி கோடிகளில் சம்பாதித்த ஓட்டுநர்- வீடியோ

    கரூர்: சும்மா பேருக்குதான் இவர் டிரைவர் வேலை பார்க்கிறார். ஆனா இப்படி கோக்குமாக்கு வேலை பண்ணி, அந்த பணத்தில் சொசுகு கார்களை வாங்கி வைத்து உல்லாசத்தில் வாழ்வார் என்று யாராலும் நினைச்சுகூட பார்க்க முடியாது!

    இப்படி பித்தலாட்டம் செய்தவருக்கு வயசு 39, பெயர் என்ன தெரியுமா.. "டிவன் காந்த்"... இந்த பெயரை அவராகவே வெச்சிக்கிட்டாரா, அல்லது இவரை நம்பி ஏமாந்த மக்கள் வழங்கிய பட்டமா என தெரியவில்லை. இவர் கரூர் வணிகவரித்துறை ஆபீசில் ஒரு சாதாரண டிரைவர்.

    Gov Office Driver was arrested who defrauded 18 people in Karur

    ஆனால் ஊருக்குள்ள கலர் கலர் ரீலாக அவிழ்த்து விட்டிருப்பார் போல இருக்கு. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 18-க்கும் மேற்பட்ட நபர்களிடம் பல கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துள்ளார். அதிலேயே ஒரு பெரிய பங்களா கட்டிவிட்டார். வீட்டு முன்னாடி நிறைய சொகுசு கார்களையும் வாங்கி நிறுத்திவிட்டார். ஆனால் இன்னும் ஒருத்தருக்கும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தரவில்லை.

    பாதிக்கப்பட்டவர்கள் இப்போது கரூர் போலீஸ் ஸ்டேஷன் வரை வந்து புகார் தரவும்தான் நம்ம டிவன் காந்த் வசமாக சிக்கி கொண்டார். தான் வாங்கிய ஒவ்வொரு காருக்கு பின்னாடியும், "தமிழக அரசு துறை வாரிய சங்கம், மாவட்ட செயலாளர்" என்று மறக்காமல் எழுதி வைத்துள்ளார்.

    Gov Office Driver was arrested who defrauded 18 people in Karur

    இன்னொரு சொகுசு காரை பார்த்தால் ஆச்சயரிமாக இருக்கிறது. மாவட்ட கலெக்டர்கள், அதிகாரிகளுக்கு உள்ளதுபோல பெயர்பலகை, பதவியை காரின் முன்பக்கம் சிவப்பு கலரில் தொங்க விட்டுள்ளார்.

    Gov Office Driver was arrested who defrauded 18 people in Karur

    இந்த காரை எப்படி ரோட்டில் ஓட்ட டிராபிக் போலீசார் அனுமதித்தார்கள், ஒருவருக்கும் இந்த காரின் பெயர்ப்பலகை கண்ணில் படவில்லையா? என்பது தெரியவில்லை. 40 வயசுகூட டிவன் காந்திக்கு ஆகல.. அதுக்குள்ள எல்லாத்தையும் அனுபவிச்சுட்டார்... இப்போ ஜெயிலுக்குள்ள கம்பி எண்ணவும் போயிட்டாரு!

    English summary
    Governement Office Driver arrested for money cheating and or Job Fraud case in In Karur
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X