கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாங்க ஊசி போடறேன்.. ஃபுல் மப்பில் வந்த அரசு மருத்துவர்.. தெறித்து ஓடிய நோயாளிகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    போதையில் வந்த அரசு மருத்துவர், தெறித்து ஓடிய நோயாளிகள்!-வீடியோ

    கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் பணியின் போது, மருத்துவர் ஒருவர் குடிபோதையில் சிகிச்சை அளிக்க நோயாளிகள் தெறித்து ஓடியுள்ளனர்.

    கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிபவர் ராஜபாண்டியன். வழக்கம் போல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நோயாளிகளை அவர் பரிசோதனை செய்ய தொடங்கினார்.

    government hospital in kulithalai, a doctor treated patients with boose.

    ஒரு கட்டத்தில்அவரச சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவரின் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரியவே, மருத்துவமனை ஊழியர்களும், சிகிச்சை பெற வந்தவர்களும் சந்தேகம் அடைந்தனர்.

    மருத்துவர் ராஜபாண்டியனிடம் பேச்சு கொடுத்த போது தான் அவர் மதுபோதையில் இருந்ததது தெரிய வந்தது. உடனே, மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சை அளிக்க வேண்டாம் என்று எடுத்துரைக்க, ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி உளர ஆரம்பித்தார்.

    மருத்துவரின் செய்கைகளினால் அதிருப்தி அடைந்த மற்ற நோயாளிகளும். அவர்களது உறவினர்களும் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டனர். அவர்களின் வசவு சொற்களை வாங்கிய அவர், தமது பெயர் ராஜபாண்டியன் என்று கூறி போதையில் வாய்க்கு வந்தபடி உளறிய படியே தள்ளாடினார்.

    தகவலறிந்து பொதுமக்களும் அங்கு கூட, அவர்களிடமும் போதையில் உளறியுள்ளார். ஒரு கட்டத்தில் ரொம்ப தடுமாறிய மருத்துவர் ராஜபாண்டியன், மருத்துவமனை ஓரத்திலேயே படுத்துவிட்டார்.

    உயிரை காக்க வேண்டிய ஓர் உன்னத தொழிலில் உள்ள அரசு மருத்துவரின் செயல்பாடுகளினால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

    English summary
    In Karur district government hospital, a drunken doctor treated patients in boose. The public and patients urged the higher authority to take action against him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X