கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாஸ்க் போடாவிட்டால் அபராதம் விதிப்பதோடு விடுவதில்லை.. முகக் கவசமும் கொடுத்து அசத்தும் கரூர் போலீஸ்

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் முககவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தும், முகக் கவசம் வழங்கி அறிவுரை கூறுகிறார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து.

Recommended Video

    மாஸ்க் போடாவிட்டால் அபராதம் மட்டுமல்ல.. முகக்கவசமும் தந்து அசத்தும் கரூர் போலீஸ் - வீடியோ

    கொரோனா நோய் தொற்று காரணமாக முககவசம் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவுரித்தியுள்ளது. இதனிடையே முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு ரூ.100 அபராதம்மும், சமூக விலகலை கடைபிடிக்காத நிறுவனங்கள் , கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

    Inspirational story: Bike riders getting mask from Karur traffic inspector

    இதனை தொடர்ந்து இன்று காலை கரூர் பேருந்து ரவுண்டானா , திண்ணப்பா கார்னர் , லைட்டவுஸ் கார்னர் , சர்ச் கார்னர் , மதுரை , சேலம் , திருச்சி , கோவை மற்றும் ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட இடங்களில் கரூர் போக்குவரத்து ஆய்வாளர் மாரிமுத்து தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    Inspirational story: Bike riders getting mask from Karur traffic inspector

    இதில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதித்தும் முகக் கவசத்தின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்த காவல் ஆய்வாளர், மேலும் 100 ரூபாய் அபராதம் வித்தித்து, அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார்.

    Inspirational story: Bike riders getting mask from Karur traffic inspector

    இதுவரையில் சுமார் 2000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

    Inspirational story: Bike riders getting mask from Karur traffic inspector

    செய்தியாளர்களிடம் ஆய்வாளர் மாரிமுத்து மேலும், கூறுகையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, முகக் கவசம் அணியாமல் பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும், முக்கவசம் என்பது மற்றவர்களிடம் இருந்து நோய் தொற்று நமக்கும், நம்மிடம் இருந்து மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கும் ஓர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். எனவே, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என்றார்.

    வசந்தகுமாரின் கொரோனா வைரஸ் மருந்து.. 2 ரூபாய்தான்.. பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு வசந்தகுமாரின் கொரோனா வைரஸ் மருந்து.. 2 ரூபாய்தான்.. பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

    வசந்தகுமாரின் கொரோனா வைரஸ் மருந்து.. 2 ரூபாய்தான்.. பரிசீலிக்க மத்திய அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

    English summary
    Motorists who do not wear a face mask in Karur is be fined Rs. 100 and the Inspector giving them mask.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X