கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தம்பிதுரையை தோற்கடித்தது இப்படித்தான்.. கரூரின் முதல் பெண் எம்பி ஜோதிமணி சொல்வதை கேளுங்க

Google Oneindia Tamil News

கரூர்: மக்களவை தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி என்ற பெருமையை காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி பெற்றுள்ளார். அதுவும் அதிமுகவின் முக்கியதலைவர்களில் ஒருவரான தம்பித்துரையை சுமார்.4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அசத்தி உள்ளார். அப்படி என்ன மாயஜாலம் செய்து ஜோதிமணி வெற்றி பெற்றார் என்ற கேள்விக்கு அவரே விடை அளித்துள்ளார்.

தமிழகத்தில் இளம் காங்கிரஸ் தலைவராக உருவெடுத்து வருகிறார் கரூம் எம்பியாகி உள்ள ஜோதிமணி. பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து கடந்த 5 ஆண்டுகளாக ஊடங்களில் குரல் கொடுத்து வந்த ஜோதிமணிக்கு இந்த முறை கரூரில் நிற்கும் வாய்பினை ராகுல் காந்தி வழங்கினார்.

jothimani is first karur women mp, she told media, how did win karur lok sabha poll

தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை அருமையாக பயன்படுத்திய ஜோதிமணி, அதிமுகவின் வலிமையான தலைவரான தம்பித்துரையை சுமார் 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, கரூரின் முதல் பெண் எம்பி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தம்பித்துரையை தோற்கடித்தது எப்படி என்று தமிழகத்தில் உள்ள பிரபல செய்திதாள் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியது. அந்த செய்திதாளுக்கு அவர் அளித்த பதிலில், " "கரூரில் வேட்பளாராக நான் வேட்பாளராக உடனேயே தம்பி செந்தில்பாலாஜி (தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்) யும், நானும் அமர்ந்து தேர்தல் வேலைகள் தொடர்பாக பேசினோம்.

குழுக்கள் அமைத்து கிராமங்களுக்கு சென்று அவர்களின் பிரச்சனைகளை அறிந்து தனித்தேர்தல் அறிக்கைகளை உருவாக்கினோம். எதிர் வேட்பாளர் தம்பித்துரை மூத்த அரசியல்வாதி என்பதுடன், பலமுறை கரூர் தொகுதியில் வென்றவர் என்பதை அறிந்து பிரசாரங்களை செய்தோம். அதிமுகவினர் ஆளுங்கட்சி எந்திரத்தை தவறாக பயன்படுத்தினர். ஆனால் நாங்கள் நேர்மையாக, அமைதியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்தோம்.

முதற்கட்ட பிரசாரத்தின் போதே 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என நினைத்தோம்.கணித்தோம். பின்னர் போக, போக மக்களின் தன்னெழுச்சி, உணர்ச்சி வெள்ளத்தை பார்த்தபோது அது இன்னும் அதிகரிக்கும் என்பது தெள்ளதெளிவானது கரூர் மக்களவை தொகுதி வரலாற்றில் முதல் பெண் எம்.பி. என்ற பெருமையையும் எனக்கு கரூர் தொகுதி மக்கள் அளித்துள்ளார்கள்" என்றார்.

English summary
jothimani is first karur women mp, she told media, how did win against tambidurai in karur lok sabha poll
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X