கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கரூரில் காந்தி சிலை முன்பு தர்ணா செய்த ஜோதிமணி எம்.பி - குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீஸ்

கரூரில் காந்தி சிலை அமைக்க கட்டப்பட்டுள்ள பீடம் தரமற்றதாக கூறி தர்ணா போராட்டம் நடத்திய எம்.பி ஜோதிமணியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Google Oneindia Tamil News

கரூர். அதிமுகவின் ஊழல் காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறி தர்ணா போராட்டம் நடத்திய கரூர் எம்.பி ஜோதிமணியை கைது செய்த காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

JothiMani MP arrested by the Karur police

கரூர் மாவட்டத்தில் லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த காந்தி சிலை இருந்து வந்தது. அதை பூங்கா அமைப்பு பணிக்காக எவ்வித அறிவிப்பும் இன்றி அங்கிருந்து அகற்றப்பட்டது. இதற்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடுமையான எதிர்ப்பை பதவி செய்தார்.

JothiMani MP arrested by the Karur police

கரூரில் காந்திசிலையை இரவோடு இரவாக காணவில்லை.எவ்வித அரசு ஆணை,டெண்டர் எதுவுமில்லாமல் சிலையை அப்புறப்படுத்திவிட்டு சட்டத்திற்கு புறம்பாக அவசரகதியில் பூங்கா அமைப்பு பணி நடக்கிறது என்று ஜோதிமணி குற்றம் சாட்டியிருந்தார். தரமற்ற பணி வேறு. அதிமுகவின் ஊழல் காந்தியைக்கூட விட்டுவைக்கவில்லை. இது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கூறியிருந்தார் ஜோதிமணி எம்.பி.

JothiMani MP arrested by the Karur police

இந்த நிலையில் ரவுண்டானா பாகுதியில் புதிதாக காந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காந்தி சிலை அமைக்கப்பட்டிருந்த பீடம் தரமற்றதாக உள்ளதாக குற்றம் சாட்டினால் எம்.பி ஜோதிமணி. இன்று காலையில் காந்தி சிலை வைக்கப்பட்டிருந்த பகுதியில் ஜோதிமணி தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

JothiMani MP arrested by the Karur police

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி ஜோதிமணியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல்துறையினர் வேனில் ஏற்றினர்.

English summary
Police have arrested Karur MP Jothi Mani, who was protesting in Dharna, alleging that the pedestal on which the Gandhi statue was erected in Karur was substandard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X