கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு.. வீட்டுக்குள்ளேயே புத்தகம் படிக்கும் கரூர் எம்பி ஜோதிமணி

Google Oneindia Tamil News

கரூர்: இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இன்று கரூர் எம்பி ஜோதிமணி புத்தகம் படித்து கொண்டிருக்கும் காட்சிகளை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் பலியானோரின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்த வைரஸ் 3ஆவது நிலைக்கு செல்வதை தடுக்க இன்று ஒரு நாள் மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

Jothimani says in her tweet that she is reading books on Janata Curfew

அதன்படி இன்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை பல்வேறு பிரபலங்களும் வலியுறுத்தினர். மேலும் புத்தகம் படித்தல், சினிமா பார்த்தல், செய்தித்தாள்களை வாசித்தல், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல் உள்ளிட்ட பணிகள் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா: தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அரசு நீட்டிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

அதன்படி கரூர் எம்பி ஜோதிமணி ஊரடங்கையொட்டி வீட்டுக்குள் உட்கார்ந்து புத்தகம் படித்து தனது நேரத்தை செலவிடுகிறார். அன்றாடம் தொகுதி பிரச்சினை, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் என இருந்த அவர் இன்று புத்தகம் படித்து வருகிறார்.

இதுகுறித்து ஜோதிமணி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது புத்தகம் படிப்பதற்கான நேரம்!அதற்குமுன் எனது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர்,திண்டுக்கல்,திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர்கள்&கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஆகியோரைத் தொடர்புகொண்டு கொரொனா வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தேன் என தெரிவித்துள்ளார்.

English summary
Karur Mp Jothimani says in her tweet that she is reading books on Janata Curfew. She is reading Infinite Vision.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X