கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும்.. கரூரில் ஜோதிமணி ஆரூடம்!

Google Oneindia Tamil News

கரூர்: தோல்வி பயத்தில் கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபடும் தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும் என ஜோதிமணி ஆரூடம் கூறியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

தேர்தல் களம் தற்போது நிலவும் வெப்பநிலையை விட சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் சில தொகுதிகளில் இரு தரப்பிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் சபாஷ் சரியான போட்டி என சொல்லும் அளவுக்கு உள்ளனர்.

ஊட்டியில் ஓபிஎஸ்.. பேரன் பள்ளி விழாவுக்கு விசிட்.. கோஷ்டி பூசலையும் சமாளித்தார்.. செம பரபரப்பு!ஊட்டியில் ஓபிஎஸ்.. பேரன் பள்ளி விழாவுக்கு விசிட்.. கோஷ்டி பூசலையும் சமாளித்தார்.. செம பரபரப்பு!

மணப்பாறையில் ஜோதிமணி பேட்டி

மணப்பாறையில் ஜோதிமணி பேட்டி

அந்த வகையில் கரூர் மக்களவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் தம்பிதுரையும் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணியும் போட்டியிடுகின்றனர். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விடத்திலாம்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜோதிமணி.

10 ஆண்டுகள்

10 ஆண்டுகள்

அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டு போட்டால் கை கழுவக் கூட தண்ணீர் கிடைக்காது என்று தம்பிதுரை கூறியுள்ளார். இதை சொல்ல அவர் வெட்கப்பட வேண்டும். 10 ஆண்டுகளாக எம்பியாகவும் மக்களவை துணை சபாநாயகராகவும் இருந்து வருகிறார்.

திறப்பு

திறப்பு

அவருக்காக பல அமைச்சரவை கதவுகள் தட்டாமலேயே திறக்கப்பட்டிருந்த போதும் மோடிக்கு அடிமை செய்வதுதான் முக்கியம் என கருதியுள்ளார். இதனால் கரூர் மக்களின் நலனில் அக்கறையில்லாமல் இருந்தார்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் வாழ்க்கை

அவரது தோல்வி உறுதி செய்யப்பட்டுவிட்டது. நிச்சயம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தம்பிதுரையின் அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும் நேரம் வந்துவிட்டது. அதிமுகவின் மூத்த தலைவர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு கீழ்த்தரமான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். அதை பார்த்து நாங்கள் அச்சப்பட மாட்டோம். என்றார் ஜோதிமணி.

English summary
Congress Jothimani says that Thambidurai's political life will come to end after this elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X